சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாட்ஜில் தங்கியிருந்த கரூர் ஆசாமி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரத்தில் லாட்ஜில் தங்கியிருந்த கரூர் ஆசாமி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் மாவட்டம், நச்சலுாரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி,45; இவர், சென்னையில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.இவர், சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விழுப்புரம் வந்துள்ளார். இரவு ஊரடங்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் லாட்ஜில் தங்கியிருந்த கரூர் ஆசாமி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கரூர் மாவட்டம், நச்சலுாரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி,45; இவர், சென்னையில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.இவர், சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விழுப்புரம் வந்துள்ளார். இரவு ஊரடங்கு காரணமாக விழுப்புரத்தில் இருந்து கரூர் செல்ல பஸ் இல்லாததால், பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை அடுத்து தங்கினார்.நேற்று காலை 10:00 மணிக்கு மேலாகியும் ராமமூர்த்தி தங்கியுள்ள அறைக்கதவு திறக்காததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியே பார்த்தபோது, உள்ளே ராமமூர்த்தி ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.திடுக்கிட்ட ஊழியர்கள், அறைக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ராமமூர்த்தி இரு கைகளில் வெட்டு காயங்கள் இருந்தது. அருகில் பிளேடு கிடந்தது. ராமமூர்த்தி பிளேடால் கைகளை கிழித்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடன் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ராமமூர்த்தி, ஏன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X