பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : மே 01, 2021
Share
Advertisement
மயங்கி விழுந்து பெண் பலிநகரி: சித்துார் மாவட்டம், பிச்சாட்டூர் அடுத்த, துளசிகிருஷ்ணாபுரம், இருளர் காலனியைச் சேர்ந்தவர் சின்னம்மா, 49. இவர், நேற்று முன்தினம், விவசாய கூலி வேலைக்கு சென்றிருந்தார். மதியம், கொளுத்தும் வெயிலில் வீட்டிற்கு நடந்து வந்தார். பின், திடீரென மயங்கி விழுந்தார். நகரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு இறந்தார்.மின்னல் தாக்கி பெண்

மயங்கி விழுந்து பெண் பலிநகரி: சித்துார் மாவட்டம், பிச்சாட்டூர் அடுத்த, துளசிகிருஷ்ணாபுரம், இருளர் காலனியைச் சேர்ந்தவர் சின்னம்மா, 49. இவர், நேற்று முன்தினம், விவசாய கூலி வேலைக்கு சென்றிருந்தார்.

மதியம், கொளுத்தும் வெயிலில் வீட்டிற்கு நடந்து வந்தார். பின், திடீரென மயங்கி விழுந்தார். நகரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு இறந்தார்.

மின்னல் தாக்கி பெண் பலிநகரி: சித்துார் மாவட்டம், கரிக்கிளி அடுத்த, ஜங்கம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரெட்டியம்மா, 56. இவர், நேற்று முன்தினம், ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கியதில், ரெட்டியம்மா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

செம்மரம் பறிமுதல்நகரி: சித்துார் மாவட்டம், பெத்தபஞ்சானி அடுத்த, சவுடேப்பள்ளி-பலமநேர் நெடுஞ்சாலையில், கேகிநேரு சோதனைச்சாவடியில், போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அவ்வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, 14 செம்மரக்கட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர். காரில் இருந்த, திருப்பத்துார் சிவகுமார், 35, என்பவரை கைது செய்தனர்.

குளத்தில் முதியவர் சடலம் மீட்புதிருப்போரூர்: திருப்போரூர் அபிராமி நகர், குறுக்கு சந்து தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம், 60. கேளம்பாக்கம் இந்தியன் வங்கியில், ஓராண்டுக்கும் மேலாக, தற்காலிக நகை மதிப்பீட்டாளர் வேலை பார்த்துள்ளார்; மனைவி, இரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் குளத்தில், நேற்று காலை, இறந்து மிதந்தார். மேலும் ஒருவர் மரணம்மாமல்லபுரம்: கூவத்துார் அடுத்த வேப்பஞ்சேரியில், ஏப்., 26ல், தனியார் மற்றும் அரசு பஸ்கள், நேருக்கு நேர் மோதி, கோர விபத்து ஏற்பட்டது. இதில், தனியார் பஸ் பயணியர், நான்கு பேர், அரசு பஸ் ஓட்டுனர் என, ஐந்து பேர், அன்று இறந்தனர். மேலும், தனியார் பஸ் பயணி ஒருவர், சென்னை, தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி, ஏப்., 29ல் இறந்தார்.

இந்நிலையில், அரசு பஸ்சில் பயணம் செய்த, கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர் குப்புசாமி மகன் சத்தியமூர்த்தி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று முன்தினம் இறந்தார். குழந்தை இறப்புதிருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், ஆசிரியர் நகர் பகுதி பிரபு என்பவர் மகன் ஜெய்ரித்திக், 2. கடந்த ஏப்., 28ல், வீட்டில் இருந்த, ஆல் அவுட் கொசு மருந்தை குடித்து, மயங்கி விழுந்தான்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தான். குண்டர் சட்டத்தில் வாலிபர் கைதுதிருவள்ளூர்: திருவள்ளூரில், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

திருவள்ளூர் அடுத்த, செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன், 32. இவர் மீது, திருவள்ளூர் டவுன் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையத்தில், ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதையடுத்து, திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன் பரிந்துரையின்படி, கலெக்டர் பொன்னையா, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, திருவள்ளூர் டவுன் போலீசார், தமிழரசனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X