பொது செய்தி

இந்தியா

காப்பீடு திட்டங்களில் இணைவதில் மக்கள் அதிக ஆர்வம்

Added : மே 01, 2021
Share
Advertisement
பெங்களூரு : கொரோனா சிகிச்சை முன்னெச்சரிக்கையாக, காப்பீடு திட்டங்களில் இணைவதில், மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மீளும் நாட்களை பலரும் எதிர்பார்த்துள்ளனர். கொரோனா வராமல் தடுக்கும் நடவடிக்கைகளாக, பாரம்பரிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வழிமுறைகளை பின்பற்றுவது; நுரையீரல் பலப்படுத்தும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது; யோகா

பெங்களூரு : கொரோனா சிகிச்சை முன்னெச்சரிக்கையாக, காப்பீடு திட்டங்களில் இணைவதில், மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மீளும் நாட்களை பலரும் எதிர்பார்த்துள்ளனர். கொரோனா வராமல் தடுக்கும் நடவடிக்கைகளாக, பாரம்பரிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் வழிமுறைகளை பின்பற்றுவது; நுரையீரல் பலப்படுத்தும் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது; யோகா பயிற்சிகளை கற்றுக்கொள்ளாதோரும் சுவாச பயிற்சிகளை செய்து கொண்டிருப்பது;சமூக இடைவெளி; கிருமி நாசினி பயன்பாடு; முக கவசம் அணிவது என அனைத்தையுமே பின்பற்றி வருகின்றனர்.

இருப்பினும், பலருக்கும் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பதாக உணருவதால், வீட்டு தனிமைகளிலும்; சிலர், மருத்துவமனைகளிலும் சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.அரசு மருத்துவமனைகளில் செல்லாதோர், தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். ஆனால், சிகிச்சைக்கான செலவுகளை தாக்குபிடிக்க முடியாமல் பலரும் சிகிச்சையின் பாதி நாட்களிலேயே, அரசு மருத்துவமனைக்கோ அல்லது வீடுகளுக்கோ சென்று சிகிச்சை பெற முடிவு செய்கின்றனர்.இப்பிரச்னையால், நோய் பாதிப்பு இல்லாதோரும், நோய் தடுப்பு நடவடிக்கையுடன், பாதிக்கப்பட்டபின் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் தயாராகி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மருத்துவ காப்பீடு மற்றும் இதர மருத்துவ செலவுகளுக்கு உதவித் தொகை அளிக்கும் காப்பீடு திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர்.காப்பீடு திட்ட ஏஜென்ட் ஒருவர் கூறுகையில்,'கொரோனா பாதிப்பு வந்தால் செலவுகளை பார்த்து கொள்ளவும் தயாராக வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர்.'எதிர்கால திட்டம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார பிரச்னையால், அன்பு கொண்டவர்களை இழந்துவிடக்கூடாதென அச்சப்படுகின்றனர்.'பலரும் தங்களின் வசதிக்கேற்ப திட்டங்களில் இணைய துவங்கியுள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X