பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயிச்ச பிறகு மறக்காம கேளுங்க

Added : மே 01, 2021
Share
Advertisement
தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 6ம் தேதி நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்க உள்ளது. இன்று நள்ளிரவுக்குள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யார் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிப்பர் என, விவாதப் பேச்சுகளும், அவதானிப்புகளும் அனல் பறக்கின்றன. வெற்றி பெறுவது யாராக இருப்பினும், தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்காளர்களுக்கு

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 6ம் தேதி நடந்து முடிந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்க உள்ளது. இன்று நள்ளிரவுக்குள், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. யார் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிப்பர் என, விவாதப் பேச்சுகளும், அவதானிப்புகளும் அனல் பறக்கின்றன.

வெற்றி பெறுவது யாராக இருப்பினும், தேர்தல் பிரசாரத்தின்போது, வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது, வேட்பாளரின் பொறுப்பு. ஆனால், வெற்றிக்கு பின், பெரும்பாலும், தாங்கள் அளித்த வாக்குறுதிகளை மறந்து, தொகுதி பக்கம்கூட வராமல், மாயமாகி விடுவது வேட்பாளர்களின் வழக்கம். அதனால், இந்த முறையாவது, உஷாராக இருங்கள் வாக்காளர்களே...பிரசாரத்தின்போது, முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை இங்கே தருகிறோம். பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். வெற்றி பெற்ற பின், வேட்பாளர்கள் மறந்தாலும், மறந்து விடுவார்கள்...!

நீங்கள் தான் ஞாபகப்படுத்த வேண்டும். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டுள்ள வேட்பாளர்களின் வாக்குறுதிகள் இதோ...டி.ஜெ.கோவிந்தராஜன் -- தி.மு.க., கும்மிடிப்பூண்டி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும் கும்மிடிப்பூண்டியில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தி, நவீனப்படுத்தப்படும் கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் நச்சு கழிவு மேலாண்மை நிலையத்தை, ஊருக்கு வெளியே மாற்றி அமைக்கப்படும் கவரைப்பேட்டையில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் கும்மிடிப்பூண்டி பகுதியில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்படும் கும்மிடிப்பூண்டியில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே சுற்றுலா தலம் அமைக்கப்படும் எல்லாபுரம் ஒன்றியம் ஏனாம்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் எல்லாபுரம் ஒன்றியம் தண்டலம் அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்எம்.பிரகாஷ் - - பா.ம.க., கும்மிடிப்பூண்டி தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் கும்மிடிப்பூண்டி தொகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் இளைஞர்கள் சிறு தொழில் துவங்க, அரசிடம் கடன் உதவி பெற்று தரப்படும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுயதொழில் துவங்க பயிற்சி மையம் அமைக்கப்படும் இளைஞர் சமுதாயம் பயனடைய, விளையாட்டு பயிற்றுனர் மற்றும் உபகரணங்களுடன், விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்படும் இலவச உடற்பயிற்சி மையம் அமைத்து தரப்படும்கே.எம்.டில்லி -- தே.மு.தி.க., கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும், கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படும் ஊராட்சிகளில், மக்கள் தொகை 5,000 பேர் இருந்தால், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் அரசு மகளிர் கலை கல்லுாரி அமைக்கப்படும் பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு மினி பஸ் வசதி ஏற்படுத்தப்படும் அனைத்து கிராமங்களிலும் மகளிர் குழு கட்டடம் நிறுவப்படும் தொகுதிக்கு உட்பட்ட மூன்று இடங்களில் இலவச கணினி பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும் அனைத்து கிராமங்களுக்கும் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்யப்படும் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் அனைத்து அரசு பள்ளிகளிலும் நுாலக வசதி ஏற்படுத்தப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X