சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் மாயம்: தாய் புகார்

Added : மே 01, 2021
Share
Advertisement
செஞ்சி: கணவருடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற மகளை கண்டு பிடித்து தருமாறு தாய் போலீசில் புகார் செய்துள்ளார். விழுப்புரம் அடுத்த கல்யாணம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஜெயப்பிரியா 28; இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 12, 10 வயதில் பெண் பிள்ளைகளும், 6 வயதில் ஆண் பிள்ளையும் உள்ளனர்.குடிப்பழக்கம் உள்ள மணிகண்டன் அடிக்கடி குடித்து விட்டு வந்து

செஞ்சி: கணவருடன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்ற மகளை கண்டு பிடித்து தருமாறு தாய் போலீசில் புகார் செய்துள்ளார். விழுப்புரம் அடுத்த கல்யாணம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி ஜெயப்பிரியா 28; இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. 12, 10 வயதில் பெண் பிள்ளைகளும், 6 வயதில் ஆண் பிள்ளையும் உள்ளனர்.குடிப்பழக்கம் உள்ள மணிகண்டன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி ஜெயப்பிரியாவை அடித்துள்ளார். கடந்த 28ம் தேதி இரவு மணிகண்டன் குடித்து விட்டு வந்து சண்டை போட்டதால் ஜெயப்பிரியா கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, ஜெயப்பிரியாவின் தாய் பிரேமா 47; மகளை கண்டு பிடித்து தருமாறு கஞ்சனுார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயப்பிரியாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X