பொது செய்தி

இந்தியா

மருத்துவமனையான திருமண மண்டபம்

Added : மே 01, 2021
Share
Advertisement
பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி, கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரா ரெட்டி ஆகியோர் தங்கள் திருமண மண்டபங்களை, கொரோனா நோயாளிகளின் படுக்கை வசதிக்காக, வழங்கினர். சந்திரா ரெட்டி கூறுகையில், ''அனைவருக்கும் மனித நேயம், ஆரோக்கியம் மிக முக்கியம். கொரோனா பாதிப்பாளர்கள் படுக்கை வசதி இல்லாமல் கஷ்டப் பட்டு வருகின்றனர். எனவே, காமசமுத்ராவில் உள்ள,என்

பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி, கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரா ரெட்டி ஆகியோர் தங்கள் திருமண மண்டபங்களை, கொரோனா நோயாளிகளின் படுக்கை வசதிக்காக, வழங்கினர்.

சந்திரா ரெட்டி கூறுகையில், ''அனைவருக்கும் மனித நேயம், ஆரோக்கியம் மிக முக்கியம். கொரோனா பாதிப்பாளர்கள் படுக்கை வசதி இல்லாமல் கஷ்டப் பட்டு வருகின்றனர். எனவே, காமசமுத்ராவில் உள்ள,என் திருமண மண்டபம்; எம்.எல்.ஏ.,வின் பங்கார்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தையும் கொரோனா மருத்துவமனையாக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துள்ளோம்,'' என்றார்.கட்டுப்பாட்டு அறை திறப்புகொரோனா நோயாளிகளுக்கு உதவிட, கட்டுப்பாட்டு அறையை, சீனிவாசப்பூரில், தாசில்தார் சீனிவாஸ் நேற்று திறந்து வைத்தார்.

இக்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தால், ஆம்புலன்ஸ், அவசர சிகிச்சை, ஆக்சிஜன், படுக்கை வசதி கிடைக்க உதவி செய்வர். 24 மணி நேரமும் இயங்கும். 08157 -246222 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.வாகனங்கள் பறிமுதல்கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொது முடக்க விதிமுறைகளை மீறி, காலை 10:00 மணிக்கு பின்னரும் கூட, அவசிய மின்றி இரு சக்கர வாகனங்கள், கார்கள், டெம்போக்கள் இயக்கப்பட்டது. ஆய்வில் ஈடுபட்டிருந்த காவல் துறை, வருவாய் துறை, சுகாதார நலத்துறை அதிகாரிகள் நேற்று, நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

புது ஆணையர் 'ரவுண்ட்ஸ்'தங்கவயல் நகராட்சி பொறுப்பு ஆணையர் மோகன் குமார், நகராட்சி ஊழியர்களுடன் எம்.ஜி.மார்க்கெட்டில், நேற்று ஆய்வு செய்தார். காலை 10:00 மணிக்கு மேல் கடைகளை திறக்க கூடாதென கடுமையாக எச்சரித்தார்.சமூக இடைவெளி; முக கவசம் கட்டாயம் அணிவது என விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார். விதிமுறைகள் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உணர்த்தினார்.சப்பாத்தி கேட்புகோலார், மங்கசந்திரா கோவிட் சென்டரில் கொரோனா தொற்று பாதித்தோர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குள்ள நோயாளிகள், 12 பேர், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அரிசி சாதம் வழங்கப்பட்டது. சாப்பிட மறுத்த அவர்கள், தங்களுக்கு சப்பாத்தி வழங்குமாறு, நேற்று வலியுறுத்தினர். ஆவன செய்வதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது.பா.ஜ.,வினருக்கு முஸ்லிம்கள் மதிய உணவுகொரோனா தொற்று மருத்துவமனையாக்கதங்கச் சுரங்க மருத்துவ மனையை, சீரமைக்கும் பணியில் பா.ஜ., தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு, ஆண்டர்சன்பேட்டை முஸ்லிம் இளைஞர்கள் நேற்றுமதிய உணவு வழங்கினர். பொது சேவையில் தொடர்ந்து ஈடுபடுமாறு உற்சாகப்படுத்தினர்.தொழிலாளர் தினம்உலக தொழிலாளர் தினமான நேற்று தங்கவயலில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடக்க வில்லை. ஆயினும் மார்க்., கம்யூ., - இந்திய கம்யூ., தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கட்சி பறக்க விட்டனர்.மாரிகுப்பம் கில்பர்ட்ஸ், செல்லப்பா லைன், சாம்பியன் டி பிளாக், ஆண்டர்சன்பேட்டை மார்க்., கம்யூ., அலுவலகம், தொழிற்சங்க அலுவலகம், பெமல் தொழிற் சங்க அலுவலகம் ஆகிய இடங்களில் கொடிகளை பறக்க விட்டனர்.உண்டியல் பணம் திருட்டுகோலாரில் பொது முடக்கத்தை பயன்படுத்தி, குருபரபேட்டை, ஆஞ்சநேயர் கோவிலில்உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X