சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க மக்கள் இரவு, பகலாக காத்துக் கிடக்கும் அவலம்

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை:'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், பொதுமக்கள் இரவு, பகலாக காத்துக் கிடக்கும் அவலம் தொடர்கிறது. பலர், 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, மருந்து வாங்கிச் செல்கின்றனர்.தமிழகத்தில், கொரோனா தொற்றால், மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு, ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

சென்னை:'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், பொதுமக்கள் இரவு, பகலாக காத்துக் கிடக்கும் அவலம் தொடர்கிறது. பலர், 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, மருந்து வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகத்தில், கொரோனா தொற்றால், மூச்சுத்திணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு, ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தனியார் மருத்துவ மனைகளில், இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதனால், டாக்டர்கள்தரும் பரிந்துரை சீட்டுடன் பலர் தெரு தெருவாக, ரெம்டெசிவர் மருந்து வாங்க அலைந்தனர். கள்ளச்சந்தையிலும் விற்பனை நடந்தது.

இதை தவிர்க்கும் வகையில், தமிழக மருத்துவப் பணிகள்கழகம் சார்பில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ஏப்ரல் 26ல், உயிர் காக்கும் மருந்தகம் துவக்கப் பட்டது.இங்கு, முதல் நாளில் இருந்தே, ரெம்டெசிவிர் மருந்து வாங்க, கூட்டம் அலைமோதுகிறது. தினமும், ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், மருந்து விற்பனை மையம், அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து, ரெம்டெசிவிர் மருந்தை, நோயாளிகளின் உறவினர்கள் வாங்கிச் செல்கின்றனர். பலர் முதல் நாள், 'டோக்கன்' பெற்று, இரவிலும் அங்கே படுத்திருந்து, மறுநாள் மருந்து வாங்கிச் செல்லும் அவலம் தொடர்கிறது.மருந்து வாங்குவதற்காக, பிற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவதால், அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


'6 நாளில் 15 ஆயிரம்குப்பிகள் விற்பனை'

தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறியதாவது:உரிய ஆவணங்களுடன் வருவோருக்கு, ஒரு குப்பி, 1,568 ரூபாய் என, ஆறு குப்பிகள் வழங்கப் படுகின்றன. இதன்படி, ஆறு நாட்களில், 15 ஆயிரம், 'ரெம்டெசிவிர்' குப்பிகள், இரண்டு கோடியே, 35 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலை தவிர்க்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் விற்பனையை கண்காணித்து, காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ரெம்டெசிவிர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X