பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே கேட் சீரமைப்பு போக்குவரத்து மாற்றம்

Added : மே 01, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் ரயில்வே கேட் சீரமைப்பு பணி நடந்ததால் திருக்கோவிலுார் - விழுப்புரம் மார்க்கத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.திருக்கோவிலுார் - விழுப்புரம் மார்க்க போக்குவரத்து மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனிடையே அரகண்டநல்லுாரில் ரயில்வே கிராசிங் உள்ளது. கரும்பு டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இப்பாதையில் அதிகம் பயணிப்பதால்,

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் ரயில்வே கேட் சீரமைப்பு பணி நடந்ததால் திருக்கோவிலுார் - விழுப்புரம் மார்க்கத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.திருக்கோவிலுார் - விழுப்புரம் மார்க்க போக்குவரத்து மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனிடையே அரகண்டநல்லுாரில் ரயில்வே கிராசிங் உள்ளது. கரும்பு டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இப்பாதையில் அதிகம் பயணிப்பதால், ரயில்வேகேட் கிராசிங் வழித்தடம் அவ்வப்போது பழுதடைவது வாடிக்கையாகி விட்டது.இதனை சீரமைக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் நேற்று காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை போக்குவரத்தை தடை செய்து, சீரமைப்பு பணியை மேற்கொண்டது.இதன் காரணமாக இவ்வழி தடத்திலான போக்குவரத்து மாற்றப்பட்டது. சு.கொல்லுார் - அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி வழியாக சென்றது. மேலும் சில வாகனங்கள் புத்துார், ஆற்காடு, ஆயந்துார் வழியாக சென்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X