பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சந்தையில் 'ரெம்டெசிவிர்' விற்றால் குண்டர் சட்டம் பாயும்

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை:'கள்ளச்சந்தையில், 'ரெம்டெசிவிர்' மருந்தை விற்போர் மீது குண்டர் சட்டம் பாயும்' என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 'கொரோனா நோயாளி களுக்காக, டாக்டர்கள் பரிந்துரை செய்யும் ரெம்டெசிவிர் மருந்தை, மர்ம நபர்கள் கள்ளச் சந்தையில், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர். அவர்கள் மீது, காவல் துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதாரத்துறை செயலர்

சென்னை:'கள்ளச்சந்தையில், 'ரெம்டெசிவிர்' மருந்தை விற்போர் மீது குண்டர் சட்டம் பாயும்' என, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'கொரோனா நோயாளி களுக்காக, டாக்டர்கள் பரிந்துரை செய்யும் ரெம்டெசிவிர் மருந்தை, மர்ம நபர்கள் கள்ளச் சந்தையில், 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர். அவர்கள் மீது, காவல் துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அதன்படி, உளவுத்துறை போலீசார் வாயிலாக, ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்போர் குறித்து, ரகசியமாக தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இரக்கமற்று செயல்படும் மர்ம நபர்கள் குறித்து, அவசர போலீஸ் எண், 100க்கு பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில், ரெம்டெசிவிர் மருந்தை, கள்ளச் சந்தையில் விற்ற, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது இம்ரான், 26; கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சாம்பசிவம், 56; வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் ராமன், 29, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பதில், மருத்துவமனை பணியாளர்கள் அதிகம் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால், தனியார் மருத்துவமனை நிர்வாகிகள், தங்கள் ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். தவறுக்கு மருத்துவமனை உடந்தையாக இருந்தால், உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X