பொது செய்தி

இந்தியா

-காவிரி ஆற்றில் தடை..தடுப்பு மூலம் கண்காணிப்பு

Added : மே 01, 2021
Share
Advertisement
மாண்டியா : கொரோனாவால் இறந்தோர் அஸ்தியை கரைக்க வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், ஸ்ரீரங்கபட்டணா காவிரி ஆற்றில், தடை விதிக்கப்பட்டதால் தடுப்புகள் வைத்து, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இறந்த, தங்கள் சொந்தங்களின் அஸ்தியை, ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவில் ஓடும், காவிரி ஆற்றில் கரைத்து, இறுதி சடங்கு செய்வர்.கொரோனா இரண்டாம் அலையால், இறந்தோர் அஸ்தியை

மாண்டியா : கொரோனாவால் இறந்தோர் அஸ்தியை கரைக்க வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், ஸ்ரீரங்கபட்டணா காவிரி ஆற்றில், தடை விதிக்கப்பட்டதால் தடுப்புகள் வைத்து, கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்த, தங்கள் சொந்தங்களின் அஸ்தியை, ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவில் ஓடும், காவிரி ஆற்றில் கரைத்து, இறுதி சடங்கு செய்வர்.கொரோனா இரண்டாம் அலையால், இறந்தோர் அஸ்தியை கரைக்க பெங்களூரு, மைசூரு உட்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது.இதனால் புரோகிதர்களும் கூட, உறவினர்களை தொலைவில் நிறுத்தி வைத்து, சடங்குகளை முடித்து வந்தனர்.தினந்தோறும் வெளியூரை சேர்ந்தவர்கள் வந்ததால், பஞ்சிமவாஹினி, கோசாய் காட், காவிரி சங்கமா மற்றும் பி.ஜி.ஹொளே சுற்றுப்பகுதியில் இருப்போர், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் செய்தனர்.இதையடுத்து, தாசில்தார் ரூபா தலைமையில், அஸ்தி கரைப்பு இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இதையடுத்து, அடுத்த உத்தரவு வரும் வகையில், காவிரி ஆற்றில் யாரும் அஸ்தியை கரைக்கவோ, அதற்கான சடங்குகளை செய்யவோ கூடாது, என உத்தரவிடப்பட்டுள்ளது.பஞ்சிமவாஹினி, கோசாய் காட், காவிரி சங்கமா மற்றும் பி.ஜி.ஹொளேயில், போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X