சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே அரசு மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்ய எடுத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் டி.எஸ்.பி., ராஜூ உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாபு மேற்பார்வையில், மணலுார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5:00 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஜம்பை பகுதியிலிருந்து சந்தேகத்துக்கு

திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை அருகே அரசு மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்ய எடுத்துச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.திருக்கோவிலூர் டி.எஸ்.பி., ராஜூ உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாபு மேற்பார்வையில், மணலுார்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5:00 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஜம்பை பகுதியிலிருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், தேவரடியார்குப்பத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் சக்திவேல்,30; என்பவர், 144 மதுபாட்டில்களை கடத்திச் செல்வது தெரிய வந்தது.இதுகுறித்து மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்து சக்திவேலை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X