பொது செய்தி

இந்தியா

தவறான தகவல் பரப்பப்படுகிறது ; முதல்வர் எடியூரப்பா

Added : மே 01, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''கர்நாடகத்துக்கு தேவையான தடுப்பூசியை முன்கூட்டியே பெற, அரசு தவறிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. வினியோகிப்பதில் தாமதமாகிறதே தவிர, வேறொன்றுமில்லை,'' என முதல்வர் எடியூரபபா கூறினார். 18 முதல், 44 வயதுக்கு உட்பட்டோருக்கு, நேற்று தடுப்பூசி செலுத்தப்படாது என கூறப்பட்டு வந்த நிலையில், சம்பிரதாயத்துக்காக, சிவாஜி நகர் வாஜ்பாய் மருத்துவ கல்லுாரி

பெங்களூரு : ''கர்நாடகத்துக்கு தேவையான தடுப்பூசியை முன்கூட்டியே பெற, அரசு தவறிவிட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. வினியோகிப்பதில் தாமதமாகிறதே தவிர, வேறொன்றுமில்லை,'' என முதல்வர் எடியூரபபா கூறினார்.

18 முதல், 44 வயதுக்கு உட்பட்டோருக்கு, நேற்று தடுப்பூசி செலுத்தப்படாது என கூறப்பட்டு வந்த நிலையில், சம்பிரதாயத்துக்காக, சிவாஜி நகர் வாஜ்பாய் மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில், முதல்வர் எடியூரப்பா முன்னிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட இளம் பெண்ணுக்கு தடுப்பூசி போடப்பட்டது.பின் அவர் கூறியதாவது:கர்நாடகத்தில், 18 முதல், 44 வயதுக்கு உட்பட்டோர், 3.56 கோடி பேர் உள்ளனர். இது தவிர, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடரும்.தடுப்பூசி போட்டு கொள்ள விரும்புவோர், தங்கள் பெயரை பதிவு செய்து, போட்டு கொள்ளலாம்.

இதில், அரசுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். ஒரு கோடி தடுப்பூசி கேட்டுள்ளோம். விரைவில் வந்துவிடும்.கர்நாடகத்துக்கு தேவையான தடுப்பூசியை முன்கூட்டியே பெற, அரசு தவறிவிட்டதாக பொய்யான செய்தி பரபரப்படுகிறது. உரிய நேரத்தில் மருந்து கிடைத்துவிடும் என எண்ணினோம். ஆனால், வினியோகிப்பதில் தாமதமாகிறதே தவிர, வேறொன்று மில்லை.தற்போது, ஒரு லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. மூன்று லட்சம் தடுப்பூசி வரவுள்ளன. தடுப்பூசி முடியும் வரை, போடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X