எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க மக்கள் இரவு பகலாக காத்து கிடக்கும் அவலம்

Updated : மே 01, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை :'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பொதுமக்கள் இரவு பகலாக காத்துக்கிடக்கும் அவலம் தொடர்கிறது. பலர் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மருந்து வாங்கிச் செல்கின்றனர்.தமிழகத்தில் கொரோனா தொற்றால் மூச்சுத்திணறல் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.
'ரெம்டெசிவிர்' மருந்து ,மக்கள் ,காத்து கிடக்கும் அவலம்

சென்னை :'ரெம்டெசிவிர்' மருந்து வாங்க சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் பொதுமக்கள் இரவு பகலாக காத்துக்கிடக்கும் அவலம் தொடர்கிறது. பலர் 20 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து மருந்து வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மூச்சுத்திணறல் நுரையீரல் பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் டாக்டர்கள் தரும் பரிந்துரை சீட்டுடன் பலர் தெரு தெருவாக ரெம்டெசிவர் மருந்து வாங்க அலைந்தனர். கள்ளச்சந்தையிலும் விற்பனை நடந்தது.

இதை தவிர்க்கும் வகையில் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏப்.,26ல் உயிர்காக்கும் மருந்தகம் துவக்கப்பட்டது.இங்கு முதல் நாளில் இருந்தே ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் மருந்து விற்பனை மையம் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து ரெம்டெசிவிர் மருந்தை நோயாளிகளின் உறவினர்கள் வாங்கிச் செல்கின்றனர். பலர் முதல் நாள் 'டோக்கன்' பெற்று இரவிலும் அங்கே படுத்திருந்து மறுநாள் மருந்து வாங்கிச் செல்லும் அவலம் தொடர்கிறது.மருந்து வாங்குவதற்காக பிற மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வருவதால் அரசு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.


'6 நாளில் 15 ஆயிரம் குப்பிகள் விற்பனை'தமிழக மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் உமாநாத் கூறியதாவது:உரிய ஆவணங்களுடன் வருவோருக்குஒரு குப்பி 1568 ரூபாய் என ஆறு குப்பிகள் வழங்கப்படுகின்றன. இதன்படி ஆறு நாட்களில் 15 ஆயிரம் 'ரெம்டெசிவிர்' குப்பிகள் இரண்டு கோடியே 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில்விற்பனையை கண்காணித்து காவல் துறைநடவடிக்கை எடுத்து வருகிறது. ரெம்டெசிவிர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


கள்ளச்சந்தையில் 'ரெம்டெசிவிர்' விற்றால் குண்டர் சட்டம் பாயும்'கொரோனா நோயாளிகளுக்காக டாக்டர்கள் பரிந்துரை செய்யும் ரெம்டெசிவிர் மருந்தை மர்ம நபர்கள் கள்ளச் சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர். அவர்கள் மீது காவல் துறை வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.அதன்படி உளவுத்துறை போலீசார் வாயிலாக ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்போர் குறித்து ரகசியமாக தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இரக்கமற்று செயல்படும் மர்ம நபர்கள் குறித்து பொது மக்கள் அவசர போலீஸ் எண் 100க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்ற மடிப்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் முகமது இம்ரான் 26; கோடம்பாக்கத்தை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் சாம்பசிவம் 56; வேலுார் மாவட்டத்தை சேர்ந்த செவிலியர் ராமன் 29, உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பதில் மருத்துவமனை பணியாளர்கள் அதிகம் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால் தனியார் மருத்துவனை நிர்வாகிகள் தங்கள் ஊழியர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். தவறுக்கு மருத்துவமனை உடந்தையாக இருந்தால் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nithya - Chennai,இந்தியா
02-மே-202106:29:55 IST Report Abuse
Nithya Makkalai indha stage kku kondu vandha ovvvoruvarum andha aandavankku badhil sollithan aagavum...Paavigal Thappikka mudiyaadhu
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-மே-202101:13:32 IST Report Abuse
தமிழவேல் எதிலும், எப்போதுமே திட்டமிடல் கிடையாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X