சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடு மேய்ந்த தகராறு 4 பேர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
தியாகதுருகம்: வயலில் மாடு மேய்ந்த தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் அடுத்த சாத்தபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் ரவிச்சந்திரன்,29; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் சாமிதுரை, 34; என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் சாமிதுரையின் மாடு, ரவிச்சந்திரனின் வயலில் மேய்ந்ததால்

தியாகதுருகம்: வயலில் மாடு மேய்ந்த தகராறில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் அடுத்த சாத்தபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் மகன் ரவிச்சந்திரன்,29; இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த நாராயணன் மகன் சாமிதுரை, 34; என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் சாமிதுரையின் மாடு, ரவிச்சந்திரனின் வயலில் மேய்ந்ததால் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில், இரு தரப்பினரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தாக்கிக் கொண்டனர்.இதில் ரவிச்சந்திரன் அவரின் அண்ணன் துரை,34; நாராயணன்,70; இவரின் மகன் சாமிதுரை,34; ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து இரு தரப்பினர் கொடுத்த புகார்களின் பேரில், தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து, நாராயணன்,70; சாமிதுரை,34; துரை, 34; ரவிச்சந்திரன்,29; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X