பொது செய்தி

இந்தியா

முழுமையாக 'பொது முடக்கம்' அமல்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை

Added : மே 01, 2021
Share
Advertisement
கலபுரகி : ''கர்நாடகாவில் முழுமையாக 'பொது முடக்கம்' அமல்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை. ஆனால் அரசின் விதிமுறைகளை, மக்கள் பின்பற்றாவிட்டால், கடினமாக முடிவெடுப்பதை தவிர, அரசுக்கு வேறு வழியில்லை,'' என சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் மீண்டும் எச்சரித்தார். கலபுரகியின் ஜிம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லுாரிக்கு, அமைச்சர் சுதாகர் நேற்று நேரில் சென்று,

கலபுரகி : ''கர்நாடகாவில் முழுமையாக 'பொது முடக்கம்' அமல்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை. ஆனால் அரசின் விதிமுறைகளை, மக்கள் பின்பற்றாவிட்டால், கடினமாக முடிவெடுப்பதை தவிர, அரசுக்கு வேறு வழியில்லை,'' என சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் மீண்டும் எச்சரித்தார்.

கலபுரகியின் ஜிம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லுாரிக்கு, அமைச்சர் சுதாகர் நேற்று நேரில் சென்று, ஆய்வு செய்தார். கொரோனா சிகிச்சை பற்றி, மருத்துவ அதிகாரிகளை கேட்டறிந்தார். டாக்டர்கள், நிர்வாக அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினார்.அப்போது அமைச்சர், 'ரெம்டெசிவிர் ஊசி மருந்து பயன்பாடு தொடர்பாக, புகார்கள் வந்துள்ளது. நோயாளிக்கு அளிக்க வேண்டிய, ஊசி மருந்தை, கள்ளச்சந்தையில் விற்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் நிர்வகிப்புக்கு, வல்லுனர் குழு அமைக்க வேண்டும். தினமும் அறிக்கையளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

தேவையின்றி நடமாட்டம்பின். விருந்தினர் இல்லத்தில், அவர் கூறியதாவது:சூழ்நிலையின் தீவிரத்தை, மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தேவையின்றி வெளியே நடமாடக்கூடாது. வீட்டிலேயே இருந்து, தொற்றிலிருந்து, தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும்.திடீரென, 'பொது முடக்கம்' அமல்படுத்தப்படாது. கொரோனாவை கட்டுப்படுத்த, கால அவகாசம் தேவை. மஹாராஷ்டிராவில், தொடர்ந்து, 44 நாட்கள் தீவிர முயற்சிக்கு பின், நேற்று (நேற்று முன்தினம்) தொற்று அளவு, 65 ஆயிரத்திலிருந்து, 45 ஆயிரமாக குறைந்தது.அரசு பிறப்பித்த, கடுமையான விதிமுறைகளை, மக்கள் பின்பற்ற வேண்டும்.

உலகின் பல நாடுகளில், இத்தகைய விதிமுறைகளால், தொற்றை கட்டுப்படுத்தினர். கர்நாடகாவிலும், 14 நாட்கள் 'பொது முடக்கம்' அறிவித்ததால், தொற்று கட்டுக்குள் வருமென்ற நம்பிக்கை உள்ளது.மாநிலத்தில், முழுமையாக 'பொது முடக்கம்' அமல்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை. அரசின் விதிமுறைகளை, மக்கள் பின்பற்றாவிட்டால், கடினமாக முடிவெடுப்பதை தவிர, அரசுக்கு வேறு வழியில்லை,கொரோனா தொற்றை கண்டுப்பிடிக்க, தேவையான ஸ்கேனிங்கிற்கு, தனியார் ஆய்வகங்கள், அதிக கட்டணம் வசூலிப்பது, அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.ஒரே விதமான கட்டணம்தொழில்நுட்ப ஆலோசனை கமிட்டி கூட்டத்தில், ஆலோசித்து மாநிலம் முழுவதும், ஒரே விதமான கட்டணம் நிர்ணயிப்பது குறித்து, அறிக்கையளிக்கும்படி உத்தரவிட்டுள்ளோம்.

மற்ற மாநிலங்களை விட, குறைவான கட்டணம் நிர்ணயிப்போம்.மாநிலத்தில் கண்டுப்பிடிக்கப் பட்ட, கொரோனா நோயாளிகளில், 80 முதல் 85 சதவீதம் பேருக்கு, தொற்று தீவிரமாக இல்லை. இத்தகைய நோயாளிகள், வீட்டிலேயே சிகிச்சை பெறலாம்.ஐந்து முதல் எட்டு சதவீதம் பேருக்கு மட்டும், மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும். ஆனால் மக்கள் பயத்தால், மருத்துவமனையில் சேருகின்றனர்.சிலர் அவசர தேவைக்கு, பயன்படுத்தும் நோக்கில், ரெம்டெசிவிர் மற்றும் ஆக்சிஜனை வாங்கி, தங்கள் வீட்டில் வைத்துள்ளனர். இது சரியல்ல.மருத்துவ கல்லுாரிகள் இல்லாத மாவட்டங்களின் மக்களுக்கு, பக்கத்து மாவட்டங்களில் மருத்துவமனைகளின் படுக்கைகளை ஒதுக்கும்படி, முந்தைய ஆண்டு உத்தரவிடப்பட்டது.15 சதவீதம் படுக்கைசிக்கபல்லாபூர் மாவட்டத்தை பற்றி, உத்தரவிடப்பட வில்லை. எனவே நேற்று (நேற்று முன் தினம்) பெங்களூரின், மூன்று மருத்துவமனைகளில், 15 சதவீதம் படுக்கைகளை ஒதுக்கும்படி உத்தரவிடப்பட்டது.

பெங்களூரின் சுற்றுப்புறத்தில் உள்ள கோலார், பெங்களூரு ரூரல் மாவட்டங்களில், மருத்துவ கல்லுாரிகள் உள்ளன.ராம்நகர், சிக்கபல்லாபூர், சிக்கமகளூரு, ராய்ச்சூர், யாத்கிர் உட்பட, சில மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரிகள் இல்லை. இதனால் அக்கம், பக்கத்தில் உள்ள மாவட்டங்களில், படுக்கைகள் ஒதுக்கப்படும். இதற்காக யாரும் அதிருப்தியடைய வேண்டிய அவசியமில்லை.அடுத்த கட்ட கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, முதல்வர் எடியூரப்பா, துவக்கி வைத்தார். சீரம் நிறுவனம் மூன்று லட்சம் தடுப்பூசிகள் மட்டும், வினியோகித்துள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும், பகிர்ந்தளிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X