சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை துன்புறுத்திய கணவர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு,47; இவரது மனைவி சந்திரா,40; திருமணமாகி 20 ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், திருநாவுக்கரசு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு மனைவி சந்திராவை அடித்து, துன்புறுத்தி

கள்ளக்குறிச்சி: மனைவியை அடித்து துன்புறுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு,47; இவரது மனைவி சந்திரா,40; திருமணமாகி 20 ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இந்நிலையில், திருநாவுக்கரசு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு மனைவி சந்திராவை அடித்து, துன்புறுத்தி வந்தார். கடந்த 23ம் தேதி சுயமாக தொழில் துவங்க வேண்டும் என்று கூறி ரூ.10 லட்சம் பணம், 20 சவரன் தங்க நகைகள் வாங்கி வருமாறு கூறி, சந்திராவை அடித்து துன்புறுத்தினார். அதற்கு, பானையங்காலை சேர்ந்த ராமலிங்கம் மனைவி தெய்வநாயகி, வாசுதேவன் மனைவி மகேஸ்வரி ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.இது குறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து திருநாவுக்கரசை கைது செய்தனர். மற்ற இருவரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X