சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏமன் சென்று வந்த இரண்டு பேர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை:இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஏமன் நாட்டிற்கு சென்று, துபாய் வழியாக சென்னை வந்த இருவரை, குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரில் இருந்து, 'பிளை துபாய்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 10:55 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த முகமது சமீர், 29, ராமு கண்ணன், 32 ஆகியோரின் பாஸ்போர்ட்களை, குடியுரிமைத் துறையினர்

சென்னை:இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஏமன் நாட்டிற்கு சென்று, துபாய் வழியாக சென்னை வந்த இருவரை, குடியுரிமைத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரில் இருந்து, 'பிளை துபாய்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 10:55 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த முகமது சமீர், 29, ராமு கண்ணன், 32 ஆகியோரின் பாஸ்போர்ட்களை, குடியுரிமைத் துறையினர் சோதனையிட்டனர்.

அவர்கள் இருவரும், இந்திய அரசால், இந்தியர்கள் செல்ல தடை செய்யப்பட்ட, ஏமன் நாட்டிற்கு சென்று தங்கி விட்டு, துபாய் வழியாக சென்னை திரும்பிய தெரிய வந்தது.ஏமன் நாட்டில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளதால், 2016 முதல் அங்கு இந்தியர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏமனுக்கு சென்று, வந்த இருவரையும் கைது செய்த குடியுரிமைத் துறை அதிகாரிகள், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X