மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணி மந்தம்: மக்கள் அவதி| Dinamalar

மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணி மந்தம்: மக்கள் அவதி

Added : மே 01, 2021
Share
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த வன்னியர்புரம் பகுதி மக்கள் போதிய குடிநீர் வசதியின்றி அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், அப்பகுதியில் புதிதாக மேல்நிலை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த வன்னியர்புரத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த வன்னியர்புரம் பகுதி மக்கள் போதிய குடிநீர் வசதியின்றி அவதியடைந்து வருகின்றனர். பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில், அப்பகுதியில் புதிதாக மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது.இதனால் அப்பகுதி மக்கள், தங்களது நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது என மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால், குடிநீர் தொட்டி கட்டும் பணிக்காக பில்லர்கள் மட்டும் கட்டப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.கடலுார் ஒன்றிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை விரைந்து கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X