போதிய விலை கிடைக்கவில்லை வாழை விவசாயிகள் கவலை

Added : மே 01, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம்: கொரோனா காரணமாக வாழைக்கு போதிய விலை கிடைக்காததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் நன்றாக இருப்பதால் ஆண்டு முழுதும் விவசாயிகள் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை செய்து வருகின்றனர்.சில மாதங்களாக நெல்லுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் பெரும்பாலான

நெல்லிக்குப்பம்: கொரோனா காரணமாக வாழைக்கு போதிய விலை கிடைக்காததால், நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் நன்றாக இருப்பதால் ஆண்டு முழுதும் விவசாயிகள் கரும்பு, நெல், வாழை உள்ளிட்ட பயிர்களை செய்து வருகின்றனர்.சில மாதங்களாக நெல்லுக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் பல நுாறு ஏக்கர் பரப்பில் வாழை பயிர் செய்தனர். கடந்த ஆண்டு 6 சீப்பு கொண்ட ஒரு வாழைத் தார் 230 ரூபாய் வரை விலை போனது.நடப்பு ஆண்டும் நல்ல விலை கிடைக்கும் என விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், தற்போது 6 சீப்பு கொண்ட தார் ஒன்று அதிகபட்சமாக 130 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது.இதுகுறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், 'ஒரு வாழைக் கன்று நட்டு குலை வரும் வரை ஒரு மரத்திற்கு 100 ரூபாய் வரை செலவாகிறது. பருவநிலை மாற்றத்தால் தற்போது பெரும்பாலான தாரில் 3 முதல் 4 சீப்பு வரையே காய்கள் காய்த்துள்ளன.இதனால் வியாபாரிகள் 2 குலையை சேர்த்து ஒரு குலையாகவே கணக்கிடுகின்றனர். இரண்டு குலைகளுக்கும் சேர்த்து 120 ரூபாய் வரையே விலை போகிறது.ஒரு மரம் 60 ரூபாய் வரையே விற்பனையாவதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, ஓட்டல்கள் திறப்பதில் சிக்கல் நிலவுவதால் குறைந்த விலைக்கு கூட வாழை தார்களை வெட்ட வியாபாரிகள் வரவில்லை.நடப்பு ஆண்டு வாழை பயிர் செய்துள்ள நாங்கள் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X