பொது செய்தி

தமிழ்நாடு

கண்டு கொள்ளாத அதிகாரிகளால் காட்சிப்பொருளான சுரங்கப்பாதை

Added : மே 01, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: சின்னவடவாடியில் 8 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள சுரங்கப் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி - எருமனுார் சாலையின் குறுக்கே செல்லும், விருத்தாசலம் - சேலம் ரயில் பாதை ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி, கடந்த 2013ம் ஆண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.ஆனால், இந்த சுரங்கப்பாதையில், மழை

விருத்தாசலம்: சின்னவடவாடியில் 8 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள சுரங்கப் பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி - எருமனுார் சாலையின் குறுக்கே செல்லும், விருத்தாசலம் - சேலம் ரயில் பாதை ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றி, கடந்த 2013ம் ஆண்டு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.ஆனால், இந்த சுரங்கப்பாதையில், மழை நாட்கள் மட்டுமின்றி கோடை காலங்களிலும் நீர் சுரந்து எந்த நேரமும் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.கடந்த 8 ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால் சுரங்கப் பாதை காட்சிப் பொருளாக உள்ளது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், அருகில் உள்ள ஓடைப்பாலத்தை மாற்று பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மாற்றுப்பாதையிலும் தண்ணீர் தேங்கினால் ஒன்றரை கி.மீ., துாரம் உள்ள எருமனுார் கிராமத்திற்கு 13 கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் அவலம் உள்ளது.சுரங்கப்பாதைக்கு நிரந்தர தீர்வு காண, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.அதைத்தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தினர் கடந்த ஜனவரி மாதம் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றினர். அதன் பிறகு அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பது தொடர்கதையாக உள்ளது.சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதபடி நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X