பொது செய்தி

தமிழ்நாடு

சுழற்சி முறையில் பணி அரசு ஊழியர்கள் மனு

Added : மே 01, 2021
Share
Advertisement
கடலுார்: தொற்று பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென, அரசு ஊழியர் சங்கம் மனு அளித்துள்ளது.கடலுாரில் டி.ஆர்.ஓ., அருண் சத்யாவிடம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், செயலாளர் அரிகிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் அளித்த மனு:கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த அரசு

கடலுார்: தொற்று பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமென, அரசு ஊழியர் சங்கம் மனு அளித்துள்ளது.கடலுாரில் டி.ஆர்.ஓ., அருண் சத்யாவிடம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், செயலாளர் அரிகிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேசன், இணைச் செயலாளர் வெங்கடாஜலபதி ஆகியோர் அளித்த மனு:கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த அரசு ஊழியர்களை 33 சதவீத அளவில் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். முன்களப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும்.தொற்று பாதித்த ஊழியர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். தொற்றால் இறந்த அரசு ஊழியர்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X