சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்கில் செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

Added : மே 01, 2021
Share
Advertisement
பண்ருட்டி: பண்ருட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரோந்து சென்றனர்.அப்போது பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.அதில், பண்ருட்டி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ரோந்து சென்றனர்.அப்போது பண்ருட்டி அடுத்த பனிக்கன்குப்பம் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.அதில், பண்ருட்டி அடுத்த சின்ன எலந்தம்பட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் ஜெய்கணேஷ், 21; பெரிய எலந்தம்பட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும் தெரியவந்தது. மேலும், இருவரும், பைக்கில் செல்லும் பெண்களை குறி வைத்து அவர்களிடமிருந்து பேக், பர்ஸ் உள்ளிட்டவைகளை பறித்துச் செல்வது வழக்கம்.கடந்த 21ம் தேதி காடாம்புலியூரில், தனியார் பள்ளி ஆசிரியைகள் லில்லி, கலைச் செல்வி, 28; தொடர்ந்து 27ம் தேதி ஆ.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த தனகோடி, 45; ஆகியோரிடமிருந்து நகை மற்றும் பணத்தை வழிப்பறி செய்திருப்பது தெரியவந்தது.உடன், ஜெய்கணேஷ் மற்றும் 17 வயது சிறுவனையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3,500 ரூபாய் பணம், ஒரு பைக், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X