கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உரிமம் இல்லாத செங்கல் சூளைகளுக்கு எதிராக அரசு நடவடிக்கை

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை:'உரிமம் இன்றி இயங்கும் செங்கல் சூளைகளுக்கு எதிராக, அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், சின்ன தடாகம், நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோயம்பாளையம், பன்னிமடை கிராமங்களில், சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் இயங்கி வருவதாகவும், யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு, அவற்றை மீட்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:'உரிமம் இன்றி இயங்கும் செங்கல் சூளைகளுக்கு எதிராக, அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், சின்ன தடாகம், நஞ்சுண்டபுரம், வீரபாண்டி, சோயம்பாளையம், பன்னிமடை கிராமங்களில், சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் இயங்கி வருவதாகவும், யானை வழித்தடங்களை அடையாளம் கண்டு, அவற்றை மீட்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


ஆஜர்

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வனப்பகுதி மற்றும் யானைகள் வழித்தடங்களை ஆக்கிரமித்து இயங்கும், செங்கல் சூளைகளைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து, ஏராளமான செங்கல் சூளைகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்தது. அரசின் உத்தரவை எதிர்த்து, செங்கல் சூளை உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.

மனுக்களை, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், சிங்காரவேலன், வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, செந்தில்குமார் உள்ளிட்டோரும், அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், அரசு வழக்கறிஞர் அகில் அக்பர்அலியும் ஆஜராகினர்.


பரிசீலிப்பு

செங்கல் சூளைகளை மூடுவதற்கான உத்தரவை, வருவாய் தாசில்தார் பிறப்பித்துள்ளார்; கனிம ஒழுங்குமுறை விதிகளின்படி, கலெக்டருக்கு தான், உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளது; இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது; எங்களிடம் உரிமம் உள்ளது; அதை அதிகாரிகள் புதுப்பிக்கவில்லை என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த, நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பிறப்பித்த உத்தரவு:கோவை வனப்பகுதியில், யானைகள் வழித்தடங்களை கண்டறிந்து, அவற்றை மீட்கக் கோரிய வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் உள்ளது. இந்த அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவின் அடிப்படையில், செங்கல் சூளைகளை மூட உத்தரவு பிறப்பித்தாலும், அந்த உத்தரவின் சட்டப்பூர்வ தன்மை குறித்து, இந்த நீதிமன்றம் முடிவு செய்யலாம்.

உரிமத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, கலெக்டருக்கு அறிக்கை அளிக்க வேண்டியது, தாசில்தார் மற்றும் அதிகாரிகளின் கடமை. அதற்கு மேல், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. உரிய அதிகாரி தான் நடவடிக்கை எடுக்க முடியும். தனக்கு உள்ள அதிகாரத்தை வேறு நபருக்கு, கலெக்டர் பிரித்து கொடுக்க முடியாது.

உரிமங்களை புதுப்பிக்க கோரிய விண்ணப்பங்களுக்கு கட்டணம் பெற்றும், அவற்றை பரிசீலிக்காமல், ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் குவிந்து வருவதற்கு, அதிகாரிகள் தரப்பில் விளக்கம் இல்லை. உத்தரவுவிண்ணப்பங்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசின் பதில் மனுவிலும், விண்ணப்பங்கள் மீது மேற்கொண்டு நடவடிக்கை பற்றி எதுவும் இல்லை.

உரிம கட்டணம் மட்டும் செலுத்தி விட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, குவாரி நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இது, அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. இந்த விஷயத்தில், மாவட்ட நிர்வாகம் கடமை தவறி விட்டது. அதிகாரிகள், பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை காட்டுவதற்காக, தாசில்தார் மற்றும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துஉள்ளனர். ஆனால், அவர்களுக்கு அதற்கான அதிகாரம் இல்லை. கனிமவள விதிகளின்படி, கலெக்டர் தான், உத்தரவு பிறப்பிக்க முடியும். எனவே, தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

மனுதாரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கி, அவர்கள் தரப்பை கேட்டு, கோவை கலெக்டர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர்கள் தரப்பில், உரிய ஆவணங்களை சமர்பிக்கலாம். உரிமம் இன்றி, ஒப்புதல் இன்றி செங்கல் சூளைகள் இயங்கியது தெரிய வந்தால், அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். உரிய உரிமம், ஆவணங்களை வைத்திருந்தால், செங்கல் சூளைகளை இயக்கலாம்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X