பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையங்களில் தொற்று தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினர்

Added : மே 01, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் ஓட்டு எண்ணும் மையத்தில், தொற்று தடுப்பு பணியில் நகராட்சி, சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி வளாகம், விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையமாக மாற்றப்பட்டது.இன்று ஓட்டுகள் எண்ணப்பட உள்ளதால், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா பாதிப்பில்லை

விருத்தாசலம்: விருத்தாசலம் ஓட்டு எண்ணும் மையத்தில், தொற்று தடுப்பு பணியில் நகராட்சி, சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி வளாகம், விருத்தாசலம், திட்டக்குடி சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணும் மையமாக மாற்றப்பட்டது.இன்று ஓட்டுகள் எண்ணப்பட உள்ளதால், வேட்பாளர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா பாதிப்பில்லை என்ற சான்று பெற வேண்டியது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஓட்டு எண்ணும் மையத்தில் தொற்று பரவலைத் தவிர்க்கும் வகையில், நகராட்சி நிர்வாகம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. அதன்படி, மைய முகப்பு வாசல், வளாகம், ஓட்டுகள் எண்ணப்பட உள்ள அறைகளில் கிருமிநாசினி தெளித்து, துாய்மைப்படுத்தும் பணியில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, விருத்தாசலம் சட்டசபை தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் பிரகாஷ் உள்ளிட்டோர், பாதுகாப்பு ஏற்பாடுகள், ஓட்டு எண்ணும் இடங்களை பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X