பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலைக்கழக இயக்குனர் கலந்துரையாடல்

Added : மே 01, 2021
Share
Advertisement
வடலுார்: குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகளுடன் கோவை வேளாண் பல்கலைக் கழக இயக்குனர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் கடந்த 12 ஆண்டுகளாக விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பில் இருந்து வருகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிடும் புதிய பயிர் ரகங்களை அவர்களின் வயல்களில் பயிர் செய்து

வடலுார்: குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகளுடன் கோவை வேளாண் பல்கலைக் கழக இயக்குனர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் கடந்த 12 ஆண்டுகளாக விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பில் இருந்து வருகின்றனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் வெளியிடும் புதிய பயிர் ரகங்களை அவர்களின் வயல்களில் பயிர் செய்து வருகின்றனர்.அந்த வகையில் ஆடுதுறை 45ல் இருந்து 54 வரை நெல் ரகத்தையும், வி.ஆர்.ஐ., 7, 8 வேர்க்கடலை ரகத்தையும், வம்பன் 4, 5, 6, 7, 8, 10 உளுந்து ரகத்தையும், வி.ஆர்.ஐ., 3 எள் போன்ற புதியரக பயிர்களை புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி செலவை குறைத்து மும்மடங்கு மகசூலை அதிகரித்து அதிக லாபம் அடைந்து வருகின்றனர்.மேலும், விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய அதிகாரிகள் இவர்களுக்கு பக்க துணையாக இருந்து ஆலோசனைகள் மற்றும் தொழில் நுட்பங்களை கற்றுத் தருகின்றனர்.இந்நிலையில், விருத்தாசலம் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர், பேராசிரியர்கள், ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர்கள் உழவர் மன்ற விவசாயிகளை பாராட்டி அவர்களுடன் நேரடியாக கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து நேற்று, கோவை வேளாண் பல்கலைக்கழக இயக்குனர் (திட்டமிடல் மற்றும் மேற்பார்வை) வெங்கடபிரபு குறிஞ்சிப்பாடி கிராமத்திற்குச் சென்று விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.விருத்தாசலம் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம், பேராசிரியர்கள் மருதாச்சலம், பாஸ்கரன், பாரதி மோகன் நடராஜன், முன்னோடி விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X