பொது செய்தி

தமிழ்நாடு

கடலுார் மாவட்டத்தில் கோவாக்சின் தட்டுப்பாடு?

Added : மே 01, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி 39ஆக இருந்த தினசரி தொற்று, நேற்று முன்தினம் 292 ஆக உயர்ந்தது. பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்த நிலையில், இதுவரை 327 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி 39ஆக இருந்த தினசரி தொற்று, நேற்று முன்தினம் 292 ஆக உயர்ந்தது. பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்த நிலையில், இதுவரை 327 பேர் இறந்துள்ளனர்.இந்நிலையில், கொரோனா தடுப்பூசி அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லுாரிகள் உள்ளிட்ட 90 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டு, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தினமும் 4,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் வரை 1,46,522 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இதில், முதல் டோஸ் போட்டவர்கள் ஆண்கள் 65,144, பெண்கள் 49,263, இதரர் 13 பேர் என, 1,14,420 பேர் ஆவர்.இரண்டாவது டோஸ் 32,102 பேருக்கு போடப்பட்டுள்ளது. இதில், 18 முதல் 30 வயது வரை 4,327 பேர், 30 முதல் 45 வயது வரை 12,721 பேர், 45 முதல் 60 வயது வரை 58,218 பேர், 60 வயதிற்கு மேல் 39,392 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில், கோவிஷீல்டு தடுப்பூசி 1,18,130 பேருக்கும், கோவாக்சின் தடுப்பூசி 28,392 பேருக்கும் போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 1,370 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்நிலையில், 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நேற்று மே 1ம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் எனவும், இதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் எனவும், அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில் கடலுார் மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்கு ஏராளமானோர் பதிவு செய்திருந்த நிலையில், அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடலுார் அரசு மருத்துவமனையில் வழக்கம் போல், நேற்று கோவிஷீல்டு பலருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு பற்றாக்குறை காரணமாக பதிவு செய்து, தடுப்பூசி போடுவதற்கு வந்த பலர் போடமுடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X