பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரம், விருத்தாசலம் தொகுதிகளில் 26 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை

Updated : மே 02, 2021 | Added : மே 01, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக விருத்தாசலம், சிதம்பரம் தொகுதிகளில் 26 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது.கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி) தொகுதியில் 305 ஓட்டுச்சாவடிகள், விருத்தாசலம் 355, நெய்வேலி 299, பண்ருட்டி 341, கடலுார் 343, குறிஞ்சிப்பாடி 336, புவனகிரி 350, சிதம்பரம் 354, காட்டுமன்னார்கோவில் (தனி) 318 என, ஒன்பது தொகுதிகளில் 3,001 ஓட்டுச் சாவடிகள்
 சிதம்பரம், விருத்தாசலம் தொகுதிகளில் 26 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அதிகபட்சமாக விருத்தாசலம், சிதம்பரம் தொகுதிகளில் 26 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது.

கடலுார் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி) தொகுதியில் 305 ஓட்டுச்சாவடிகள், விருத்தாசலம் 355, நெய்வேலி 299, பண்ருட்டி 341, கடலுார் 343, குறிஞ்சிப்பாடி 336, புவனகிரி 350, சிதம்பரம் 354, காட்டுமன்னார்கோவில் (தனி) 318 என, ஒன்பது தொகுதிகளில் 3,001 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன.இதில், திட்டக்குடியில் 1,67,389 ஓட்டுகளும், விருத்தாசலம் 1,94,742, நெய்வேலி 1,62,311, பண்ருட்டி 1,95,398, கடலுார் 1,78,985, குறிஞ்சிப்பாடி 1,99,549, புவனகிரி 1,95,250, சிதம்பரம் 1,80,548, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 1,74,240 ஓட்டுகள் என 9 தொகுதிகளில் 16 லட்சத்து 48 ஆயிரத்து 412 ஓட்டுகள் பதிவாகியுள்ளன.கடலுார், குறிஞ்சிப்பாடி தொகுதிகளுக்கு கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திலும், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகளுக்கு பண்ருட்டி, பனிக்கன்குப்பம் அண்ணா பொறியியல் கல்லுாரி மையத்திலும், விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி மையத்திலும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கு சி.முட்லுார் அரசு கல்லுாரி ஓட்டு எண்ணும் மையத்திலும் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

முதலில் தபால் ஓட்டுகளும், பின்னர், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும்.அதன்படி, திட்டக்குடி தொகுதியில் 22 சுற்றுகளும், விருத்தாசலம் 26, நெய்வேலி 22, பண்ருட்டி 25, கடலுார் 25, குறிஞ்சிப்பாடி 24, புவனகிரி 25, சிதம்பரம் 26, காட்டுமன்னார்கோவில் தொகுதியில் 23 சுற்றுகள் வரையும் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

இதில், அதிகபட்சமாக சிதம்பரம், விருத்தாசலம் தொகுதிகளில் 26 சுற்றுகள், குறைந்தபட்சமாக திட்டக்குடி, நெய்வேலி தொகுதிகளில் 22 சுற்றுகள் வரையும் எண்ணப்படும்.ஓட்டு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 டேபிள்கள் போடப்பட்டு, ஓட்டுகள் எண்ணப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் கண்காணிப்பாளர்கள் 17 பேர், உதவியாளர்கள் 17, நுண்பார்வையாளர்கள் 17, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 2 பேர், என 9 தொகுதிகளிலும் 153 கண்காணிப்பாளர்கள், 153 உதவியாளர்கள், 153 நுண் பார்வையாளர்கள், 18 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் என, 477 பேர் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X