பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த மின் அழுத்த பிரச்னை: பழுதாகும் மின் மோட்டார் சாதனங்கள்

Added : மே 01, 2021
Share
Advertisement
ராஜபாளையம்: ராஜபாளையம் நகர்ப்பகுதியில் குறைமின் அழுத்தப்பிரச்சனையால் சில இடங்களில் மின் மோட்டார் உள்ளிட்ட சாதனங்கள் பழுதாகின்றன. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் .ராஜபாளையத்திற்கான மெயின் மின் சப்ளையானது முடங்கியார் சப் ஸ்டேஷன் பகுதியிலிருந்து விநியோகமாகி வந்தது. இங்கு டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேல் சப்ளைக்கான பற்றாக்குறை

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர்ப்பகுதியில் குறைமின் அழுத்தப்பிரச்சனையால் சில இடங்களில் மின் மோட்டார் உள்ளிட்ட சாதனங்கள் பழுதாகின்றன. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் .ராஜபாளையத்திற்கான மெயின் மின் சப்ளையானது முடங்கியார் சப் ஸ்டேஷன் பகுதியிலிருந்து விநியோகமாகி வந்தது. இங்கு டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேல் சப்ளைக்கான பற்றாக்குறை நிலவி வருகிறது.இதை வெவ்வேறு பகுதியிலிருந்து பகிர்ந்து சமாளித்து வந்தனர். இதனிடையே வெயில் கால மின் பகிர்வு அதிகரித்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கான மின் மோட்டார் சில நேரங்களில் இயங்காததுடன், டியூப் லைட்கள் எரியவில்லை என தொடர் புகார் வந்தபடி உள்ளது.எம்.ஆர் நகரை சேர்ந்த பழனிவேல்: கடந்த ஒரு மாதமாக எம்.ஆர்.நகர், முகில் வண்ணம் பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின் மோட்டார்கள் தேவைான நேரத்தில் இயங்கவில்லை. இரவு நேரங்களில் காத்திருந்து போட வேண்டியதாகிறது. பேன் சரியாக சுற்றாததால் புழுக்கத்தில் தவிக்கிறோம், என்றார்.எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ரவி: இதே பிரச்னை பச்சமடம், மாப்பிள்ளை சுப்பராஜா தெரு, சிங்கராஜா கோட்டை பெரிய தெருவிலும் உள்ளது. வீடுகளில் 140 வோல்டேஜ் சப்ளை தான் வருகிறது. ஒரு மணி நேரத்தில் விழ வேண்டிய தண்ணீர் 4 மணி நேரம் ஓட வேண்டியுள்ளது. அதிக சூடு காரணமாக மின் சாதனங்கள் காயில் பழுதாகி விடுகிறது,என்றார்.ராஜபாளையம் மின் வாரிய செயற்பொறியாளர் மாலதி: முடங்கியார் மெயின் ஸ்டேஷனில் பழுது ஏற்பட்டுள்ளது. மேலிடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் கேட்டுள்ளோம். வெயில் கால மின் உபயோகம் அதிகரித்ததும் சேர்ந்து இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராஜபாளையம், நல்லமநாயக்கர் பட்டி மின் ஸ்டேஷன்களின் சப்ளையை பகிர்ந்து சமாளிக்கிறோம். விரைவில் தீர்வு காணப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X