போலீஸ் செய்திகள்

Added : மே 01, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர் பலிராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் 60. அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். நேற்று முன்தினம் இரவு நண்பருடன் டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) சென்றார். மாயூரநாத சுவாமி கோயில் அருகே வேன் மோதி இறந்தார். உடன் வந்த முருக கணேஷ் காயமடைந்தார். வடக்கு போலீசார் விசாரித்தனர்.காதலி பேசாததால் தற்கொலைசிவகாசி:

அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர் பலிராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் 60. அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். நேற்று முன்தினம் இரவு நண்பருடன் டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) சென்றார். மாயூரநாத சுவாமி கோயில் அருகே வேன் மோதி இறந்தார். உடன் வந்த முருக கணேஷ் காயமடைந்தார். வடக்கு போலீசார் விசாரித்தனர்.காதலி பேசாததால் தற்கொலைசிவகாசி: விளாம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் 24. பட்டதாரியான இவர் அதே பகுதி பெண்ணை காதலித்தார். வேலை இல்லாமல் பேச மாட்டேன் என அப்பெண் கூறியதால் மனமுடைந்த கார்த்திக், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.மறியல் செய்தவர்கள் மீது வழக்குசிவகாசி: வேண்டுராயபுரத்தில் ஆடு, கோழி திருடப்பட்டதால், அங்கு சென்ற ஏ.துலுக்கப்பட்டி மாரீஸ்வரன் 23, சத்தீஸ்வரனை 22, சிலர் தாக்கினர். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் விளாம்பட்டி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். மகளிர் போலீஸ் ஒருவர் காயமடைந்தார். மறியலில் ஈடுபட்ட காத்மா காந்தி 46, கந்தசாமி 52, பாண்டியராஜ் 37, கண்ணன் 42, மாரிச்செல்வம், கலையரசி, பூமாதேவி , லட்சுமி 40 , உட்பட 18 க்கு மேற்பட்டோர் மீது மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.பள்ளி மாணவி மாயம்சிவகாசி: சித்துராஜபுரம் கிரகத்தாயம்மாள் நகரை சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவி அப்பகுதி தனியார் பள்ளியில் படித்து வந்தார். ஆன்லைன் வகுப்பிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்ற மூதாட்டி கைதுசிவகாசி: சிவன் கோயில் நந்தவன தெருவை சேர்ந்தவர் சண்முக்கனி 62. அண்ணாததுரை காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்தார். டவுன் போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.கருந்திரி பறிமுதல்ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் போலீசார் நேற்று மாலை 6:00 மணிக்கு பாட்டக்குளம் ரோட்டில் வாகன தணிக்கை செய்தனர். காரினை சோதனை செய்ததில் 600 குரோஸ் கருந்திரி இருப்பது கண்டறியப்பட்டது. ஆமத்துாரை சேர்ந்த கோடீஸ்வரனை விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X