தமிழ்நாடு

தவிர்க்கலாமே : அரசு மருத்துவமனைகளில் கூட்ட நெரிசல்கள்; சிரமத்தை சந்திக்கும் மருத்துவ பணியாளர்கள்

Updated : மே 02, 2021 | Added : மே 01, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், அதிகாரிகள் போராடும் சூழலில் , மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க உறவினர்கள் அதிகளவில் கூடுவது பெரும் நோய் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க
  தவிர்க்கலாமே : அரசு மருத்துவமனைகளில் கூட்ட நெரிசல்கள்; சிரமத்தை சந்திக்கும் மருத்துவ பணியாளர்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், அதிகாரிகள் போராடும் சூழலில் , மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க உறவினர்கள் அதிகளவில் கூடுவது பெரும் நோய் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க தமிழக அரசு பல்வேறு அறிவுரைகளை கூறி வருகிறது. அவசியமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்கவும், முக கவசம் , சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பஜார் வீதியில் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர். நோயின் தாக்கத்தை மனதில் கொள்ளாமல் சிறு குழந்தைகளையும் பஜார் வீதிக்கு அழைத்து வருகின்றனர்.தற்போது மாவட்டத்தில் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளில் கொரோனா டெஸ்ட்கள் தினமும் எடுத்து வரும் நிலையில், அங்கு மற்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்களை பார்க்க உறவினர்கள் குடும்பத்துடன் வருகின்றனர்.

இதனால் நோய் தொற்று மேலும் அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். இதோடு அவர்கள் மிகுந்த சிரமத்திற்கும் ஆளாகின்றனர்.வார்டுகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களை சுற்றி நிற்கின்றனர். பிரசவ வார்டில் கும்பலாக நின்று கொண்டு ஊர் கதை பேசுகின்றனர். மருத்துவ பணியாளர்கள் கூறினாலும் கேட்பதில்லை.

இதனால் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் சூழல் உருவாகிறது. இதை மக்களாகிய நாம்தாம் தவிர்க்க வேண்டும்..................தனித்திருப்பது அவசியம்நோய் தொற்றுகளில் இருந்து மக்களை காக்க மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் போராடி வருகின்றனர். அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேவையின்றி மருத்துவமனையில் கூடுவதை தவிர்க்க வேண்டும். அப்படியே வந்தாலம் சமூக விதிகளை கடைபிடித்து தனித்து இருப்பது அவசியம்.-மகாலிங்கம், மருந்தாளுநர், ஸ்ரீவில்லிபுத்துார்.............

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202101:02:17 IST Report Abuse
thiagarajan V கவலையே வேண்டாம். இன்னும் 5 வருஷங்களுக்கு இப்படித் தான்.
Rate this:
Cancel
03-மே-202117:08:01 IST Report Abuse
ஆப்பு நோயாளிகளை இன்னிக்கி பாக்கலேன்னா, எதிர்காலத்தில் கல்யாணத்துக்கு கூப்புட மாட்டாங்க. பிரியாணி கிடைக்காது. மொய் எழுத மாட்டாங்க. இதெல்லாம் வியாபார உத்திகள். செண்டிமெண்ட் வேற.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X