பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் வெயிலால்பால் வரத்து குறைவு

Added : மே 01, 2021
Share
Advertisement
மானாமதுரை: மானாமதுரையில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயிலால் மாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு பால் உற்பத்தி குறைந்து வருகிறது.மானாமதுரை, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மானாமதுரை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பாலை கொண்டு வருகின்றனர்.இங்கு வாங்கப்படும் பால் பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. மீதமுள்ள பால்

மானாமதுரை: மானாமதுரையில் கடந்த சில நாட்களாக கடுமையான கோடை வெயிலால் மாடுகளுக்கு தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டு பால் உற்பத்தி குறைந்து வருகிறது.மானாமதுரை, சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மானாமதுரை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு 50க்கும் மேற்பட்டவர்கள் பாலை கொண்டு வருகின்றனர்.இங்கு வாங்கப்படும் பால் பொதுமக்களுக்கு விற்கப்படுகிறது. மீதமுள்ள பால் காரைக்குடி ஆவினுக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.கடந்த சில நாட்களாக மானாமதுரையில் கடுமையான வெயில் அடித்து வருவதால் பசுக்களுக்கு நீர்ச்சத்து குறைவாலும்,பசுந்தீவனங்கள் கிடைக்காத நிலையில் பால் வரத்து இல்லை. கூட்டுறவு சங்கத்திற்கு தேவையான பாலை கொள்முதல் செய்ய முடியாத நிலை உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X