கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தீ தடுப்பு சாதனங்களில் அலட்சியம் கூடாது: மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

Added : மே 01, 2021
Share
Advertisement
சென்னை:'தீ தடுப்பு சாதனங்கள் பொருத்துவதில் அலட்சியம் கூடாது' என, மருத்துவமனை நிர்வாகிகளை, தீயணைப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.கொரோனா நோயாளிகளுக்கு, சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை வார்டுகளில், அடிக்கடி தீ விபத்து நடக்கிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து, தீயணைப்பு துறையினர் ஆய்வு
 தீ தடுப்பு சாதனங்களில் அலட்சியம் கூடாது: மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

சென்னை:'தீ தடுப்பு சாதனங்கள் பொருத்துவதில் அலட்சியம் கூடாது' என, மருத்துவமனை நிர்வாகிகளை, தீயணைப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்கு, சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனை வார்டுகளில், அடிக்கடி தீ விபத்து நடக்கிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், தீ தடுப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து, தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். தீ தடுப்பு சாதனங்கள் பொருத்துவது, பராமரிப்பது பற்றி, சென்னை, எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில், 119 மருத்துவமனை பிரதிநிதிகளுடன், தீயணைப்பு துறையினர்,நேற்று முன்தினம் கருத்தரங்கு நடத்தினர்.

இவற்றை, தீயணைப்பு துறை இயக்குனர், டி.ஜி.பி.,சைலேந்திர பாபு துவக்கினார்.தீ தடுப்பு சாதனம் பொருத்துதல் மற்றும் பராமரித்தல் குறித்து தீயணைப்பு துறை கூடுதல் இயக்குனர் விஜயசேகர் விளக்கினார். மருத்துவமனையில், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து, ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அதிகாரி நமச்சிவாயம் பேசினார்.

மின் கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும், ஆக்சிஜன் சிலிண்டர் பாதுகாப்பு குறித்தும், கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. மேலும், மருத்துவமனைகளில் தீ தடுப்பு சாதனங்கள் பொருத்துவதில் அலட்சியம் கூடாது. தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, மருத்துவமனை நிர்வாகிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.--------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X