பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபர் மர்ம மரணம் போலீஸ் நடவடிக்கை

Added : மே 01, 2021
Share
Advertisement
திருப்புவனம்: திருப்புவனம் இந்திரா நகரைச் சேர்ந்த வாலிபரின் மரணத்தில் மர்மம் என உறவினர்கள்புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் ஐந்து மணி நேரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வந்தனர்.திருப்புவனம் இந்திரா நகரைச் சேர்ந்த முத்துவேல் மகன் அஜய் 18, மேளம் வாசிப்பவரானஇவர் நேற்று முன்தினம் இரவு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய

திருப்புவனம்: திருப்புவனம் இந்திரா நகரைச் சேர்ந்த வாலிபரின் மரணத்தில் மர்மம் என உறவினர்கள்புகார் தெரிவித்ததையடுத்து போலீசார் ஐந்து மணி நேரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வந்தனர்.திருப்புவனம் இந்திரா நகரைச் சேர்ந்த முத்துவேல் மகன் அஜய் 18, மேளம் வாசிப்பவரானஇவர் நேற்று முன்தினம் இரவு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் இறந்தார். உறவினர்கள் அஜய்யை யாரோ அடித்து கொலை செய்து விட்டதாக பிரச்னையை கிளப்பினர்.திருப்புவனம்,சிலைமான் போலீசார் விசாரணையில் அஜய் கீழடி விலக்கு அருகே ரோட்டை கடந்தபோது டூவீலர் மோதியதில் காயமடைந்ததும், அதன் பின் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி இறந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சிலைமான் அருகே நான்குவழி சாலையின் ஒரு ஓட்டலில் சி.சி.டி.வி., பதிவில் இருட்டில்சாலையை கடக்க முயன்ற அஜய் மீது டூவீலர் மோதி விழுவதும், அடுத்து வந்த மற்றொரு டூவீலர் அவர் உடல் மீது ஏறி இறங்குவதும் கேமராவில் பதிவாகி இருந்தது. வாகன ஓட்டுனரையும் கண்டுபிடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X