பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு ஓட்டுகள் 8.16 லட்சம்: முடிவுக்கு 32 சுற்றுகள்

Added : மே 01, 2021
Share
Advertisement
சிவகங்கை: காரைக்குடியில் இன்று பதிவான 8.16 லட்சம் ஓட்டுக்கள் அதிகபட்சம்32 சுற்றுக்கள் வரை எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதியில்நடந்த தேர்தலில், 11 லட்சத்து 87 ஆயிரத்து 85 வாக்காளர்களில், 8 லட்சத்து 16 ஆயிரத்து 734 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். நான்கு தொகுதியிலும் 1679 ஓட்டுச்சாவடிகளில் இருந்து ஓட்டுப்பதிவு

சிவகங்கை: காரைக்குடியில் இன்று பதிவான 8.16 லட்சம் ஓட்டுக்கள் அதிகபட்சம்32 சுற்றுக்கள் வரை எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதியில்நடந்த தேர்தலில், 11 லட்சத்து 87 ஆயிரத்து 85 வாக்காளர்களில், 8 லட்சத்து 16 ஆயிரத்து 734 பேர் ஓட்டுப்பதிவு செய்தனர். நான்கு தொகுதியிலும் 1679 ஓட்டுச்சாவடிகளில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் உள்ள ஓட்டுக்கள் சுற்று வாரியாக இன்று காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுக்கள், காலை 8:30 மணிக்கு பிற ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கெடுபிடிக்கு பின்னரே கட்சி ஏஜன்ட்கள்,அரசு அலுவலர்கள் அனுமதிக்கப்படுவர். கட்டாயம் கொரோனா பரவலை தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.அதிகபட்சம் 32 சுற்றுஓட்டு எண்ணும் பணிக்காக தொகுதிக்கு 14 டேபிள்கள் அமைத்து, டேபிளுக்கு 5 பேர் எண்ணும் பணியில் ஈடுபடுவர். காரைக்குடியில் 443 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான 2 லட்சத்து 9 ஆயிரத்து 956 ஓட்டுக்களை எண்ணி முடிக்க 32 சுற்றுக்களும், சிவகங்கைக்கு 427 ஓட்டுபதிவு இயந்திரங்களில் பதிவான 1 லட்சத்து 97 ஆயிரத்து 404 ஓட்டுக்கள் 31 சுற்றுகளும், திருப்புத்துாரில் 410 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான 2 லட்சத்து 10 ஆயிரத்து 37 ஓட்டுக்கள் எண்ண 29 சுற்றுகளும், மானாமதுரையில் 399 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான 1 லட்சத்து 99 ஆயிரத்து 637 ஓட்டுக்கள் 29 சுற்றுகள் வரை எண்ணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.கண்காணிப்பு அவசியம்தேர்தல் பணியாளர்கள்,கட்சி ஏஜன்ட்கள் ஒத்துழைப்புடன் சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையில் விறுவிறுவென எண்ணி முடித்தாலே முடிவுகள் அறிவிக்க இரவு 9:00 மணி ஆகும். ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலோ, ஏஜன்ட்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் ஓட்டு எண்ணும் பணி தாமதமானால், அதிகாலை 2:00 மணி வரை ஓட்டு எண்ணும் பணி நடக்க வாய்ப்பு உண்டு.எனவே மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவதில் எவ்விதத்திலும் பின்வாங்காமல், தொய்வின்றி, எண்ணி முடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X