பொது செய்தி

தமிழ்நாடு

கோமாளி முகமூடியை அகற்றுங்கள்: புகைப்பட கலைஞர் 'போட்டோ ஷூட்'

Added : மே 01, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'கொரோனாவை தள்ளி வைக்காமல், கூடி இருப்பது நம் கோமாளி தனம். கோமாளி முகமூடியை அகற்றுங்கள்' என்ற கருத்தை முன்னிறுத்தி, பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன், 'போட்டோ ஷூட்' நடத்தியுள்ளார்.நாடு முழுதும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 'இந்தியாவில் இருந்து வந்தால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை' என, ஆஸ்திரேலிய அரசு அறிவிக்கும் அளவுக்கு, நிலைமை மோசமாக
 கோமாளி முகமூடியை அகற்றுங்கள்: புகைப்பட கலைஞர் 'போட்டோ ஷூட்'

சென்னை:'கொரோனாவை தள்ளி வைக்காமல், கூடி இருப்பது நம் கோமாளி தனம். கோமாளி முகமூடியை அகற்றுங்கள்' என்ற கருத்தை முன்னிறுத்தி, பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன், 'போட்டோ ஷூட்' நடத்தியுள்ளார்.

நாடு முழுதும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. 'இந்தியாவில் இருந்து வந்தால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை' என, ஆஸ்திரேலிய அரசு அறிவிக்கும் அளவுக்கு, நிலைமை மோசமாக உள்ளது. இதற்கு, மக்களின் அலட்சியமும், முக்கிய காரணம். இந்நிலையில், நடிகர்விஜய் சேதுபதியை வைத்து, போட்டோ ஷூட் நடத்திய பிரபல புகைப்பட கலைஞர் எல்.ராமச்சந்திரன், தற்போது, 'கோமாளி' என்ற தலைப்பில், நடிகர் சென்றாயனை வைத்து, கொரோனா விழிப்புணர்வு புகைப்பட தொகுப்பை எடுத்துள்ளார்.

குறித்து, ராமச்சந்திரன் கூறியதாவது: நாட்டில் நாளுக்கு நாள், கொரோனா பரவலும், இறப்பு சதவீதமும் ஏறிக் கொண்டிருப்பதற்கு, தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றாததே முக்கிய காரணம். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல், நாம் அனைவரும், கோமாளி முகமூடியை அணிந்துள்ளோம். அந்த கோமாளி முகமூடியை அகற்றுங்கள் என்ற கருத்தை மையப்பொருளாக வைத்து, இந்த போட்டோ ஷூட்டை எடுத்துள்ளோம்.

நடிகர் சென்றாயனை மக்களின் பிம்பமாக வைத்து, கொரோனாவை தள்ளி வைக்காமல், கூடி விளையாடுவது போன்ற விழிப்புணர்வு தொகுப்பை உருவாக்கியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
02-மே-202108:48:47 IST Report Abuse
Girija என்னப்பா சொல்லவரே ? ஏற்கனவே மாஸ்க் முகமூடி / கவசம் அணியாமல் மக்கள் திரிகின்றனர், இதில் நீ வேற கமலஹாசனை போல் குழப்பற ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X