பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முடிவு கொண்டாட்டத்திற்கு தடை: எஸ்.பி., ராஜராஜன்

Added : மே 01, 2021
Share
Advertisement
சிவகங்கை: ''தேர்தல் முடிவு குறித்து கட்சியினர் பொது இடங்களில் கூட்டாக வந்து கொண்டாட்டம், ஊர்வலம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சிவகங்கை எஸ்.பி., ராஜராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:இன்று ஞாயிறு பொது ஊரடங்கு. அவசியம் இன்றி யாரும் வெளியில் வந்தால், வழக்கு பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில்

சிவகங்கை: ''தேர்தல் முடிவு குறித்து கட்சியினர் பொது இடங்களில் கூட்டாக வந்து கொண்டாட்டம், ஊர்வலம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சிவகங்கை எஸ்.பி., ராஜராஜன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:இன்று ஞாயிறு பொது ஊரடங்கு. அவசியம் இன்றி யாரும் வெளியில் வந்தால், வழக்கு பதிந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். காரைக்குடி அழகப்பா அரசு இன்ஜி., கல்லுாரியில் ஓட்டுஎண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அரசு அலுவலர், கட்சி ஏஜன்ட்கள் தேர்தல் கமிஷன் வழங்கிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே மையத்திற்குள் செல்ல முடியும். மற்ற கட்சி நிர்வாகிகள் யாரையும் அனுமதிக்க முடியாது.ஓட்டு எண்ணும் மையத்திற்கு வருவோர் கண்டிப்பாக தடுப்பூசி அல்லது தொற்று இல்லா சான்றுடன் வரவும். செக்காலை ரோடு வழியாக வரும் வாகனங்கள் அழகப்பா அரசு கல்லுாரி வளாகம், ஸ்ரீராம் நகர் வழியாக வரும் வாகனங்கள் அழகப்பா பல்கலை உடற்கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் நிறுத்த வேண்டும். அரசு அலுவலர்கள் வாகனங்கள் மாணவர்கள் விடுதி வளாகத்தில் நிறுத்தவும். கட்டாயம் மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் வரவும். அலைபேசி, தொலை தொடர்பு சாதனங்களுடன் வர அனுமதியில்லை.மாவட்டத்தில் கொண்டாட்டமோ, ஊர்வலமோ நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X