சிவகங்கை, காரைக்குடியில் இறைச்சி விற்பனை

Added : மே 01, 2021
Share
Advertisement
சிவகங்கை: கொரோனா ஊரடங்கு அறிவிப்பில் சனி, ஞாயிறுஅன்று இறைச்சி கடைகள் நடத்த தடை விதித்தும், சிவகங்கை, காரைக்குடியில் வழக்கம் போல் இறைச்சி விற்பனை நடந்தது.கொரோனா 2வது அலை பரவல் வேகமாகி வருகிறது. இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணியாமல் கூடி நின்று கொரோனா பரவ ஒரு காரணமாக இருந்து வருகின்றனர்.இதை தடுக்க சனி, ஞாயிறு இறைச்சி கடைகளை திறக்க கூடாது என அரசு

சிவகங்கை: கொரோனா ஊரடங்கு அறிவிப்பில் சனி, ஞாயிறுஅன்று இறைச்சி கடைகள் நடத்த தடை விதித்தும், சிவகங்கை, காரைக்குடியில் வழக்கம் போல் இறைச்சி விற்பனை நடந்தது.கொரோனா 2வது அலை பரவல் வேகமாகி வருகிறது.

இறைச்சி கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளி, மாஸ்க் அணியாமல் கூடி நின்று கொரோனா பரவ ஒரு காரணமாக இருந்து வருகின்றனர்.இதை தடுக்க சனி, ஞாயிறு இறைச்சி கடைகளை திறக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சிவகங்கை, காரைக்குடி நகராட்சி மற்றும்சுகாதாரத்துறையினர் இந்த உத்தரவை கண்டும்காணாமல் உள்ளனர்.நேற்று சிவகங்கை தினசரி சந்தை, வாரச்சந்தை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. கடைகளில் சமூக இடைவெளி, மாஸ்க் அணியாமல் நின்றதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.காரைக்குடிகாரைக்குடி நகராட்சியில் மீன், இறைச்சி விற்பனை நடந்ததோடு, ஆடுவதைக் கூடத்திலும், ரசீது வழங்கி ஆடு அறுக்கப்பட்டு , சீல் வைத்து வழங்கப்பட்டது.காரைக்குடி நகராட்சியில், நேற்று பல இடங்களில் மீன், கோழி, ஆட்டிறைச்சி கடைகள் வழக்கம் போல செயல்பட்டது. நகராட்சி ஆடுவதைக் கூடத்தில் ரசீது வழங்கி ஆடுகள் அறுக்கப்பட்டு சீல் வைத்து வழங்கப்பட்டது. புகாரின் பேரில், வியாபாரிகளை, அதிகாரிகள் கடைகளை அடைக்க வற்புறுத்தினர்.வியாபாரிகள் தெரிவிக்கையில், நகராட்சியினர் வியாபாரிகளுக்கு முறையான தகவல் அளிக்கவில்லை. காலையில் ஆடுவதைக் கூடத்தில் ஆடுகளை அறுத்து சீல் வைத்து வழங்கிவிட்டு, சிறிது நேரத்திலேயே கடையை அடைக்க சொல்கின்றனர். பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. என்றனர்.அதிகாரிகள் தெரிவிக்கையில், சனிக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்போவதாக பல்வேறு தகவல் வந்தது.ஆனால், ஊரடங்கு போடவில்லை. ஆடுவதைகூடத்தில் இருப்பவர்களுக்கு இறைச்சி கடை மூடுவது குறித்து சரியான தகவல் இல்லாததால் திறந்து வைத்திருந்தனர். தகவல் வந்த சிறிது நேரத்திலேயே வதைக்கூடம், இறைச்சிகடைகள் அடைக்கப்பட்டு விட்டன, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X