பயோமெட்ரிக் பதிவில் சிக்கல் கொரோனா பரவலால் அச்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயோமெட்ரிக் பதிவில் சிக்கல் கொரோனா பரவலால் அச்சம்

Added : மே 01, 2021
Share
சென்னை:சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் போது, பயோமெட்ரிக் முறையில், கைரேகை விபரங்களை சேகரிப்பதில், கொரோனா பரவலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 575 சார் -பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக தினமும், 20 ஆயிரம் பத்திரங்கள் வரை பதிவாகின்றன. 'ஆன்லைன்' முறையில், தற்போது பத்திரங்கள் பதிவு செய்யப்படு கின்றன.இதில், சொத்து விற்பவர், வாங்குபவர் ஆகியோரை, 'வெப் கேமரா'

சென்னை:சொத்து விற்பனை பத்திரங்களை பதிவு செய்யும் போது, பயோமெட்ரிக் முறையில், கைரேகை விபரங்களை சேகரிப்பதில், கொரோனா பரவலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், 575 சார் -பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக தினமும், 20 ஆயிரம் பத்திரங்கள் வரை பதிவாகின்றன. 'ஆன்லைன்' முறையில், தற்போது பத்திரங்கள் பதிவு செய்யப்படு கின்றன.இதில், சொத்து விற்பவர், வாங்குபவர் ஆகியோரை, 'வெப் கேமரா' வாயிலாக, புகைப்படம் எடுக்க வேண்டும். அத்துடன், 'பயோமெட்ரிக்' முறையில் கைரேகை விபரங்கள் பதிவு செய்யப்படும்.

ஒரு பத்திரத்தை பதிவு செய்வதில் விற்பவர், வாங்குபவர், பணியாளர் ஆகியோர், ஐந்து முறையாவது பயோமெட்ரிக் முறையில் கைரேகையை பதிய வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு இயந்திரத்தில், 150 பேராவது பதிய வேண்டி உள்ளது.கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இந்த பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள், பொது மக்கள் அச்சப்படுகின்றனர்.

இது குறித்து சார் - பதிவாளர்கள் கூறியதாவது: பத்திரப்பதிவின் போது, புகைப்படம் எடுக்க முக கவசம் அகற்றப்படுகிறது. அது போன்று, பயோமெட்ரிக் இயந்திரத்தில், அடுத்தடுத்த நபர்கள் விரல்களை வைக்க வேண்டியுள்ளது.இதில், ஒவ்வொரு முறையும், அந்த கருவியை கிருமி நாசினி போட்டு சுத்தப்படுத்தி, பயன்படுத்த நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

அது போன்று, பதிவுக்கு வருவோரும், தங்கள் கைகளை கிருமி நாசினி போட்டு சுத்தப்படுத்த வேண்டும்.இயல்பு நிலையில் இதை கடைப்பிடிக்கிறோம். அதிக எண்ணிக்கையில் பத்திரங்கள் பதிவுக்கு வரும்போது, இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க முடிவதில்லை. இதனால், பொதுமக்களில் யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், அவர்களை அறியாமல், தொற்று மற்றவர்களுக்கும் பரவும் நிலை ஏற்படுகிறது.எனவே, தற்காலிகமாக சில மாதங்களுக்கு, இந்த நடைமுறைகளை நிறுத்தி வைக்க பதிவுத்துறை முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X