பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் திட்ட பராமரிப்பு: வீணாகும் காவிரி குடிநீர்

Added : மே 01, 2021
Share
Advertisement
கண்டரமாணிக்கம்: காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிக்கு குழாய்களில் உள்ள குடிநீர் வெளியேற்றப்படுவதால் கோடைகாலத்தில் வறட்சியான நேரத்திலும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவது தவிர்க்க முடியாதது என்று கூறப்படுகிறது.அண்மையில் காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டத்தில்திருப்புத்துார் அருகே பட்டமங்கலத்திலிருந்து சொக்கநாதபுரம் செல்லும் ரோட்டில்

கண்டரமாணிக்கம்: காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிக்கு குழாய்களில் உள்ள குடிநீர் வெளியேற்றப்படுவதால் கோடைகாலத்தில் வறட்சியான நேரத்திலும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவது தவிர்க்க முடியாதது என்று கூறப்படுகிறது.அண்மையில் காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டத்தில்திருப்புத்துார் அருகே பட்டமங்கலத்திலிருந்து சொக்கநாதபுரம் செல்லும் ரோட்டில் தரைப்பாலம்அருகில் உள்ள கேட் வால்விலிருந்து ஏராளமான குடிநீர் வெளியேறத் துவங்கியது. கேட் வால்வு பழுதாகி குடிநீர் வெளியேறுவதாகபுகார் எழுந்தது. இது குறித்து காவிரிக்குடிநீர் திட்ட பராமரிப்பு பணி ஒப்பந்தகாரர் கூறுகையில், 'ஆத்தங்கரைப்பட்டி அருகே பராமரிப்பு பணி நடைபெறுவதால், குழாய்களில் உள்ள நீரை வெளியேற்ற கேட் வால்வு திறக்கப்பட்டு குடிநீர் வெளியேற்றப்பட்டது. பொதுவாக பராமரிப்புப் பணியின் போது கண்டவராயன்பட்டி, ஒழுகமங்கலம், செம்பனுார், கீழக்கோட்டை, பட்டமங்கலம், கல்லல் கேட் வால்வுகளை திறந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இப்போதும் பராமரிப்பிற்காகத்தான் சொக்கநாதபுரம் ஆற்றில் ஒரு வால்வை திறந்து தண்ணீர் வெளியேற்றினோம்' என்றார்.இப்பகுதியில் அடிக்கடி குழாய்கள் சேதமடைவதால் வீணாகும் குடிநீர் போல பராமரிப்பிற்காகவும் பல லட்சம் குடிநீர் வீணாவது குறிப்பிடத்தக்கது. இதற்கான மாற்று வழி குறித்து குடிநீர் வாரியத்தினர் ஆலோசிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X