பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் மீண்டும் பிளக்ஸ்

Added : மே 01, 2021
Share
Advertisement
மானாமதுரை: மானாமதுரையில் ரோடு ஓரங்களில், கட்டடங்களின் மேற்பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் உள்ளது.தமிழகத்தில் 2019ல் செப்.12ம் தேதி சுபஸ்ரீஎன்ற இளம்பெண்டூவீலரில் சென்ற போது சாலையில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக பலியானார்.இதையடுத்து

மானாமதுரை: மானாமதுரையில் ரோடு ஓரங்களில், கட்டடங்களின் மேற்பகுதியில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் உள்ளது.தமிழகத்தில் 2019ல் செப்.12ம் தேதி சுபஸ்ரீஎன்ற இளம்பெண்டூவீலரில் சென்ற போது சாலையில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர் சரிந்து விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி பரிதாபமாக பலியானார்.இதையடுத்து உயர்நீதி மன்றம் பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதித்ததைஅடுத்து உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த உத்தரவை கடுமையாக பின்பற்றி பிளக்ஸ் வைக்க விடாமல் தடுத்தனர். காலப்போக்கில் இதனை யாரும் தற்போது கண்டுகொள்ளாததை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் அம்மணிபட்டு கிராமத்தைசேர்ந்த விஜயராணி 55,என்பவர் டூவீலரில் சென்ற போது பிளக்ஸ் மேலே விழுந்ததில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் பலியானார்.மானாமதுரை பகுதியில் பல இடங்களில் ரோட்டோரம், கட்டடங்களின் மேற்பகுதியில் விளம்பர பேனர்கள் வைத்துள்ளனர். இவை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தால் ரோட்டில் செல்பவர்கள் மீது விழுந்து உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X