போலீஸ் செய்திகள்

Added : மே 01, 2021
Share
Advertisement
2.5 பவுன் திருட்டுசிவகங்கை: சிவகங்கை அருகே குமாரபட்டி அக்னிராஜ் மனைவி பஞ்சுலட்சுமி 45. இவர் ஏப்.,23 அன்று மதியம் 12:30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இவரது வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 2.5 பவுன் நகையை யாரோ திருடிச்சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.போலி ஆவணம் மூலம் கார் விற்பனைசிவகங்கை: சிவகங்கை பொதிகை நகர் ஆறுமுகம் 70. இவர் தன் நண்பர் அமல்ராஜ் உடன்

2.5 பவுன் திருட்டுசிவகங்கை: சிவகங்கை அருகே குமாரபட்டி அக்னிராஜ் மனைவி பஞ்சுலட்சுமி 45. இவர் ஏப்.,23 அன்று மதியம் 12:30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். இவரது வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த 2.5 பவுன் நகையை யாரோ திருடிச்சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.போலி ஆவணம் மூலம் கார் விற்பனைசிவகங்கை: சிவகங்கை பொதிகை நகர் ஆறுமுகம் 70. இவர் தன் நண்பர் அமல்ராஜ் உடன் பழைய கார் ஒன்றை வாங்க முயற்சித்தார். அப்போது மதுரை தாதம்பட்டியை சேர்ந்த கார் புரோக்கர் மணிகண்டனை தொடர்பு கொண்டனர். துாத்துக்குடியில்இருந்து காரை வாங்கிய புரோக்கர், சிவகங்கை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் போலி ஆவணங்களை காண்பித்து மார்ச் 4 ம் தேதி வாகனத்தை பதிவு செய்து, ஆறுமுகம் பெயருக்கு மாற்றியுள்ளார். காருக்கான தொகை ரூ.10.70 லட்சத்தை பெற்றுஉள்ளார்.ஆர்.டி.ஓ., அலுவலக விசாரணையில் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்தது தெரிந்தது. சிவகங்கை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் விசாரித்து வருகிறார்.வங்கி வேலை மோசடிசிவகங்கை: சிவகங்கை அருகே அலவாக்கோட்டை சக்திவேல் மனைவி அன்பரசி 26. இவரது அலைபேசியில் பேசிய இருவர்,தனியார் பைனான்சில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய அவர், ஆன்லைன் மூலம் அவர்களது வங்கி கணக்கில் ரூ.11000 கட்டணமாக செலுத்தியுள்ளார். வேலை வாங்கி தராமல் பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. சிவகங்கை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா விசாரிக்கிறார்.மதுவிற்ற 55 பேர் கைதுசிவகங்கை: கொரோனா மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு காரணமாக மதுக்கடைக்கு விடுமுறை அறிவித்துள்ளனர். இக்கால கட்டத்தில் போலி மதுபாட்டில் விற்பனை அதிகரித்துள்ளன. போலி மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக மாவட்ட அளவில் 54 வழக்குகள் பதிவு செய்து, 55 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1260 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.7450 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X