பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளை தாக்கும் நோய்

Added : மே 01, 2021
Share
Advertisement
சாயல்குடி: கன்னிராஜபுரத்தில் ஆடு, மாடுகளுக்கு நோய் பரவி வருவதால் கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.கன்னிராஜபுரம் சுற்று வட்டாரப் பகுதி வீடுகளில் பலர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த 10 தினங்களாக ஆடு, மாடுகளுக்கு மூக்கு,வாயிலிருந்து சளி நீர் வழிந்து கொட்டுகிறது.கன்னிராஜபுரம் விவசாயி குமார் கூறியதாவது:ஆடு, மாடுகளுக்கு நாசித்துவாரம், வாயில்இருந்து

சாயல்குடி: கன்னிராஜபுரத்தில் ஆடு, மாடுகளுக்கு நோய் பரவி வருவதால் கால்நடை வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.கன்னிராஜபுரம் சுற்று வட்டாரப் பகுதி வீடுகளில் பலர் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். கடந்த 10 தினங்களாக ஆடு, மாடுகளுக்கு மூக்கு,வாயிலிருந்து சளி நீர் வழிந்து கொட்டுகிறது.கன்னிராஜபுரம் விவசாயி குமார் கூறியதாவது:ஆடு, மாடுகளுக்கு நாசித்துவாரம், வாயில்இருந்து அடிக்கடி சளிநீர் கொட்டி வருகிறது. கன்னிராஜபுரம் கால்நடை மருத்துவமனைக்கு சென்றால் 50 கால்நடைகளுக்கு மேல் இருந்தால் கொண்டு வாருங்கள் அப்போதுதான் சிகிச்சை தர முடியும் என கூறுகின்றனர்.உரிய முறையில் கால்நடைகளுக்கு பரிசோதனை செய்ய இயலாமல் வீடு திரும்ப வேண்டியுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் கால்நடை வளர்ப்போர் நலன்கருதி கால்நடை மருத்துவ முகாம் நடத்தி கால்நடைகளை பாதுகாக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X