பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் 3 இடங்களில் காய்கறி விற்க திட்டம்: மக்களுக்கு தேவை விழிப்புணர்வு

Added : மே 02, 2021
Share
Advertisement
பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், மூன்று இடங்களில் காய்கறி மார்க்கெட் துவக்கப்பட்டுள்ளது.பரமக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தங்கவேல் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் வருவாய், வட்டார வளர்ச்சி அலுவலர், போலீசார், நகராட்சி ஆய்வாளர், பரமக்குடி வர்த்தக சங்கத் தலைவர், காய்கறி, இறைச்சி, மீன் மார்க்கெட்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா தாக்கம் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், மூன்று இடங்களில் காய்கறி மார்க்கெட் துவக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தங்கவேல் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் வருவாய், வட்டார வளர்ச்சி அலுவலர், போலீசார், நகராட்சி ஆய்வாளர், பரமக்குடி வர்த்தக சங்கத் தலைவர், காய்கறி, இறைச்சி, மீன் மார்க்கெட் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.அப்போது கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டை போல், பரமக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சந்தைக்கடை விளையாட்டு மைதானம் மற்றும் எமனேஸ்வரம் சவுராஷ்டிரா மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் காய்கறி விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. காலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை சரக்குகள்இறங்குவதற்கும், தொடர்ந்து 3:00 மணிவரை கொரோனா கட்டுப்பாடு விதிகளை கடைபிடித்து விற்பனை செய்வது எனவும் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் மே 1 முதல் இந்த நடைமுறை பின்பற்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் திடீர் முடிவால், காய்கறி விற்பனையாளர்கள் பழைய இடங்களிலேயே விற்பனை மேற்கொண்டதால், நேற்று வழக்கம்போல் காய்கறி மார்க்கெட் இயங்கின.தொடர்ந்து பொது மக்களும் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. ஆகவே அரசு அதிகாரிகள் திட்டமிட்டபடி கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X