ராமேஸ்வரத்தில்மீன் விலை எகிறியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில்மீன் விலை எகிறியது

Added : மே 02, 2021
Share
ராமேஸ்வரம்: விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதித்ததால் ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை உயர்ந்தது.மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏப்.,15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதனால் 8 ஆயிரத்திற்கும் மேலான படகுகள் மீன்பிடிக்கவில்லை. இத்தடை துவங்கி 16 நாட்கள் ஆனநிலையில், தமிழகத்தில் பல பகுதியில் மீன்களுக்கு தட்டுப்பாடு

ராமேஸ்வரம்: விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதித்ததால் ராமேஸ்வரத்தில் மீன்கள் விலை உயர்ந்தது.மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏப்.,15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல தமிழக அரசு தடை விதித்தது. இதனால் 8 ஆயிரத்திற்கும் மேலான படகுகள் மீன்பிடிக்கவில்லை. இத்தடை துவங்கி 16 நாட்கள் ஆனநிலையில், தமிழகத்தில் பல பகுதியில் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பனில் உள்ள நாட்டுபடகு மீனவர்கள் வலையில் சிக்கும் மீன்கள்உள்ளூர் மக்களின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்தாலும், பெரும்பாலான அசைவ பிரியர்களுக்கு மீன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.ராமேஸ்வரத்தில் நாட்டுபடகில் சிக்கிய மீனுக்கு விலையும் உயர்ந்து, நேற்று ஒரு கிலோ நகரை மீன் ரூ. 350 (பழைய விலை ரூ.250), முரல் ரூ.250 (பழைய விலை 150), களக்கான் ரூ.350 (பழைய விலை 300), காரல் ரூ.100 (பழைய விலை 50) என எகிறியது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X