மே தின கொடியேற்ற விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மே தின கொடியேற்ற விழா

Added : மே 02, 2021
Share
ராமநாதபுரம்: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம் நடந்தது.ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன் நடந்த விழாவிற்கு கிளைத்தலைவர் செந்தில் தலைமை வகித்தார். மத்திய சங்க துணை செயலார் பாஸ்கரன் கொடியேற்றினார். பொருளாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு போக்குவரத்து பணிமனை

ராமநாதபுரம்: உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றம் நடந்தது.ராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன் நடந்த விழாவிற்கு கிளைத்தலைவர் செந்தில் தலைமை வகித்தார். மத்திய சங்க துணை செயலார் பாஸ்கரன் கொடியேற்றினார். பொருளாளர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு போக்குவரத்து பணிமனை நகர் கிளையில் நடந்த விழாவிற்கு ஜோதிமுருகன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவானி கொடியேற்றினார். மின்வாரிய அலவலகம் தெற்குபிரிவில் கோட்டதலைவர் ஜெபமணி, காசிநாதன், மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம்,சி.ஐ.டி.யு., மாவட்ட அலுவலகம், ஆர்.எஸ்.மடை மற்றும் பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி, ராமேஸ்வரம் ஆகிய கிளைகளில் கொடியேற்றம்நடந்தது. நிர்வாகிகள், உறுப்பினர் பங்கேற்றனர்.தேவகோட்டைதேவகோட்டை நகர இந்திய கம்யூ. சார்பில் மேதினத்தை முன்னிட்டு பல இடங்களில் கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நகர செயலாளர் காமராஜ் தலைமையில் ஏஐடியுசி தேசிய குழு உறுப்பினர் மீனாள், துணை செயலாளர் சுப்பையா, மாதர் சங்க செயலாளர் சேவத்தாள், ஏஐடியுசி நகர செயலாளர் லட்சுமணன் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X