பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் வசதியை மேம்படுத்த வேண்டும்

Added : மே 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுவோரில் 3ல் ஒரு பகுதியினர் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்களே. அத்துடன் ஆக்சிஜன் உள்பட வசதிகள் தேவைப்படுவோர்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு பாதிக்கப்படுவோரில் 3ல் ஒரு பகுதியினர் திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளவர்களே. அத்துடன் ஆக்சிஜன் உள்பட வசதிகள் தேவைப்படுவோர் பெரும்பாலும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கே பரிந்துக்கப்படுகின்றனர். அதேநேரம் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தண்ணீர் பிரச்னை, சுகாதாரம், மின் விசிறிகள் பழுதடைந்து காணப்படுகிறது. குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு இன்றி உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. வெளி நோயாளிகள், கொரோனா நோயாளிகள், தடுப்பூசி செலுத்துவோர் பிரிவு என அனைத்தும் நெருக்கமாகவே உள்ளது. இதனால், சமூக இடைவெளி கேள்விக்குரியதாகிறது.குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை பின்புறம் குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும்.----------------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X