பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசின் இலவச அரிசி நாளை வினியோகம் இல்லை

Added : மே 02, 2021
Share
Advertisement
சென்னை:ரேஷன் கடைகளில் நாளை முதல், வழக்கமான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் துவங்கும் நிலையில், மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி மட்டும், தமிழகத்தின்புதிய அரசு அறிவிக்கும்தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.நாடு முழுதும், கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலையால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஏழ்மை நிலையில் இருப்பதை குறிக்கும், முன்னுரிமை,

சென்னை:ரேஷன் கடைகளில் நாளை முதல், வழக்கமான அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் துவங்கும் நிலையில், மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி மட்டும், தமிழகத்தின்புதிய அரசு அறிவிக்கும்தேதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.

நாடு முழுதும், கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலையால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஏழ்மை நிலையில் இருப்பதை குறிக்கும், முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு, மே, ஜூனில், ஏற்கனவே வழங்குவதுடன், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், கூடுதலாக, 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது.

அந்த தானியங்கள், மத்திய தொகுப்பில் இருந்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதன்படி, தமிழகத்தில்,அரிசி பிரிவில் உள்ள முன்னுரிமை, அந்தியோதயா, முன்னுரிமையற்ற என, அனைத்து கார்டுதாரருக்கும், கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், தலா, 5 கிலோ கூடுதல்அரிசி வழங்கப்பட உள்ளது.

இதற்கான கருத்துருவை தயாரித்து, உணவு வழங்கல் துறை, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு ஒப்புதல் அளித்ததும், கூடுதல் அரிசி வழங்கப்பட உள்ளது.இதனால், ரேஷனில் நாளை முதல் வழக்கமான அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் வினியோகம் மட்டும் மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் கூடுதல்இலவச அரிசி மட்டும், புதிய அரசு தெரிவிக்கும்தேதியில் இருந்து வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X