பொது செய்தி

தமிழ்நாடு

தவிப்பு: பெற்றோர்களை கைவிடும் பிள்ளைகள்

Added : மே 02, 2021
Share
Advertisement
சமீப காலமாக வயதான, நோய் பாதித்த பெற்றோரை பிள்ளைகள் பராமரிக்காமல் தவிக்க விடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. சிலர் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் சேர்க்கும் அவலம் உள்ளது.சொத்துக்களை அபகரித்து கொண்டு பெற்றோரை வீதியில் விட்டுச் செல்கின்றனர். மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 80 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெற்றோர்கள் உதவி கேட்டும், பராமரிக்காத

சமீப காலமாக வயதான, நோய் பாதித்த பெற்றோரை பிள்ளைகள் பராமரிக்காமல் தவிக்க விடும் சம்பவம் அரங்கேறி வருகிறது. சிலர் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களிலும் சேர்க்கும் அவலம் உள்ளது.

சொத்துக்களை அபகரித்து கொண்டு பெற்றோரை வீதியில் விட்டுச் செல்கின்றனர். மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 80 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற நிலையில் இருக்கும் பெற்றோர்கள் உதவி கேட்டும், பராமரிக்காத பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் புகார்கள் அளித்துள்ளனர்.வாரந்தோறும் குறைந்தது 10 பேர் வரை புகார் அளிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் ஆர்.டி.ஓ.,விடம் விண்ணப்பிக்கலாம். மனுதாரரும், எதிர் தரப்பும் நேரில் விசாரிக்கப்படுவர்.விசாரணையில் சுமூக முடிவு எட்டவில்லை எனில் பெற்றோருக்கு மாதாந்திர பராமரிப்பு தொகையாக ரூ.10 ஆயிரம் வரை பெற்று தரப்படும். நடவடிக்கைக்கு கட்டுப்படாதவர்களுக்கு 3 மாதம் சிறை, ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். எனவே, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் உதவி பெற சமூக நலத்துறையை அணுகலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X