பொது செய்தி

தமிழ்நாடு

இன்று ஓட்டு எண்ணிக்கை 'அலர்ட்' செய்த மின் வாரியம்

Added : மே 02, 2021
Share
Advertisement
சென்னை:இன்று ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், மின் வினியோக பணிகளில் கவனமுடன் இருக்கும்படி, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின் வாரியம், 'அலர்ட்' செய்துள்ளது.தமிழகத்தில், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதனங்களில் ஏற்படும் பழுதால், மின் தடை ஏற்படுகிறது. ஒரு மாதமாக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து, காத்திருக்கும் சட்டசபை தேர்தல் ஓட்டு

சென்னை:இன்று ஓட்டு எண்ணிக்கை நடப்பதால், மின் வினியோக பணிகளில் கவனமுடன் இருக்கும்படி, பிரிவு அலுவலக பொறியாளர்களை, மின் வாரியம், 'அலர்ட்' செய்துள்ளது.

தமிழகத்தில், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதனங்களில் ஏற்படும் பழுதால், மின் தடை ஏற்படுகிறது. ஒரு மாதமாக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து, காத்திருக்கும் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்கிறது.முழு ஊரடங்கால், அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை என்றாலும், பலரும் காலை முதல் வீடுகளில் இருந்தபடி, 'டிவி' வாயிலாக, தேர்தல் முடிவுகளை பார்ப்பர். இதனால், வீடுகளில், 'டிவி, ஏசி' உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு அதிகம் இருக்கும்.

இதையடுத்து, தடையில்லா மின்சாரம்வழங்குவதை உறுதி செய்ய, ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும், மின் வழித்தடங்களை கண்காணிப்பது உள்ளிட்ட, மின் வினியோக பணிகளில் முழு கவனமுடன் இருக்கும்படி, பொறியாளர்களை வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X