முழு ஊரடங்கிற்கு முன்பாக கடைகளில் திரண்ட கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முழு ஊரடங்கிற்கு முன்பாக கடைகளில் திரண்ட கூட்டம்

Added : மே 02, 2021
Share
திண்டுக்கல்: கொரோனா பரவல் எதிரொலியாக இன்று ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் நேற்று கடை வீதிகள், பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தினமும் இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரையும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இதனால் வார இறுதியில் சொந்த ஊர் பயணிப்பவர்கள் நேற்று காலையில் இருந்தே பஸ், ரயில்களில்

திண்டுக்கல்: கொரோனா பரவல் எதிரொலியாக இன்று ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் நேற்று கடை வீதிகள், பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தினமும் இரவு 10:00 முதல் அதிகாலை 4:00 மணி வரையும், ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இதனால் வார இறுதியில் சொந்த ஊர் பயணிப்பவர்கள் நேற்று காலையில் இருந்தே பஸ், ரயில்களில் கூட்டமாக சென்றனர். இன்று (மே 2) பால், மருந்து பொருட்கள் தவிர மற்ற கடைகளுக்கு அனுமதியில்லை.இதனால் நேற்று காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா விதிகளை மீறிய கடை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X